விஜய் கட்சியினால் அதிமுகவுக்கு லாபம் தான். திமுகவில் உழைக்கிற சில இளைஞர்களும் தவெக-வுக்கு சென்று விடுவார்கள். திமுகவில் முழுவதும் சீனியர் சிட்டிசன்கள் தான் இருப்பார்கள்.
மனிதசங்கிலி போராட்டத்தில் செல்லூர் ராஜூ
சொத்துவரி உயர்வை கண்டித்து அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, வளர்மதி தலைமையில் மதுரை நேதாஜி சாலையில் மனிதசங்கிலி போராட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமான அதிமுக தொண்டர்கள் கலந்துகொண்டனர். மனித சங்கிலி போராட்டத்தில் கலந்துகொண்ட அதிமுக தொண்டர்களை செல்லூர் ராஜூ வாழ்த்து தெரிவித்தார்.
பின்னர் செல்லூர் ராஜூ அளித்த பேட்டியில்
அண்ணாமலையை விமர்சித்ததை கண்டித்து பாஜக மதுரை மாவட்ட தலைவர் விடுத்த கண்டன அறிக்கை தொடர்பான கேள்விக்கு
"அண்ணாமலையை பற்றி நான் விமர்சிக்கவில்லை. பொதுக்கூட்டத்தில் பேசுகையில் தொண்டர்களை பார்த்து என்னப்பா ஆட்டுக்குட்டி மாதிரி தலையாட்டுகிறீர்கள் என்று தான் கேட்டேன். வேற ஒன்றும் இல்லை. நாங்கள் போருக்கு போகிறோம், எலி பிடிப்பதை பற்றி பேசிக் கொண்டிருக்கிறீர்கள்" என்றார்.
ஓ.பி.எஸ். டெல்லி சென்று பாஜக தலைவர்களை சந்தித்தது குறித்த கேள்விக்கு, "ஓ.பன்னீர்செல்வம் மக்களால் மறக்கப்பட்டவர். அவரைப் பற்றி பேச வேண்டியதில்லை"
நடிகர் விஜயின் அரசியல் மாநாடு குறித்த கேள்விக்கு, "விஜய் இப்போது தான் மாநாடே நடத்த போகிறார். அதிமுக வேறப்பா... திமுகவில் இருந்து நீக்கப்பட்ட பின்னர் எம்.ஜி.ஆருக்கு மக்கள் மத்தியில் மிகப்பெரிய எழுச்சி இருந்தது. அதுபோன்ற எழுச்சி தம்பி விஜய்க்கு இருக்குமா என தெரியாது. விஜய் நிறைய இளைஞர்களை வைத்துள்ளார். ஆனால், மாநாட்டில் கொள்கை அறிவித்த பின்னரே விஜய்யை மக்கள் ஏற்பார்களா இல்லையா என்பது தெரியவரும். அதிமுகவுக்கு விஜயை பார்த்து பயமே இல்லை. விஜயின் கட்சியில் முழுக்க முழுக்க திமுக உறுப்பினர்கள் தான் உள்ளனர். அதனால் தான் திமுக தலைவர்கள் விஜயை விமர்சிக்கிறார்கள். பாவம் சின்னபையன் விஜய், அவரும் வளர வேண்டாமா. நேற்று வரை நடிகைகளுடன் ஆடிக்கொண்டிருந்த உதயநிதி ஸ்டாலினை துணை முதலமைச்சர் ஆக்குகிறீர்கள், விஜய் வருவதை ஏன் தடுக்கிறீர்கள்? எங்களுக்கு பாதிப்பே இல்லை. விஜய் கட்சியினால் அதிமுகவுக்கு லாபம் தான். திமுகவில் உழைக்கிற சில இளைஞர்களும் தவெக-வுக்கு சென்று விடுவார்கள். திமுகவில் முழுவதும் சீனியர் சிட்டிசன்கள் தான் இருப்பார்கள்" என்றார்
மேலும் செய்திகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் - Airtel AI: ஸ்பேம் அழைப்புகளுக்கு எதிராக AI: களத்தில் இறக்கிய ஏர்டெல் நிறுவனம்.!
இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - Stock Market Today:மத்திய கிழக்கு நாடுகளில் தொடரும் பதற்றம்;பங்குச்சந்தை வீழ்ச்சி - 900 புள்ளிகள் சரிந்த சென்செக்ஸ்!