கொடைக்கானலில் பெய்த மழையால் அடுக்கம் - கும்பக்கரை பெரியகுளம் செல்லும் சாலையில் திடீர் மண் சரிவு, விளை பொருட்களை கொண்டு செல்ல முடியாமல், தலை சுமையாக கொண்டு செல்லும் கிராம மக்கள் சாலையில் மண் மற்றும் ராட்சத கற்கள் கிடப்பதாலும், ஆறு போன்று மழை நீர் செல்வதால் போக்குவரத்து கடும் பாதிப்படைந்தது.

Continues below advertisement

தமிழகத்தில்  பெரும்பாலான மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்து இருந்தது, இதனையடுத்து தேனி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள கொடைக்கானல் மலைப்பகுதியில் ஒரு சில இடங்களில் கன மழையாகவும், ஒரு சில இடங்களில் மிதமான மழையாகவும் பெய்தது, கொடைக்கானல் அடுக்கம் ஊராட்சி. பெரியகுளம் அருகே  உள்ள பகுதியில் 1 மணி நேரத்திற்கும் மேலாக கன மழையானது கொட்டி தீர்த்துள்ளது, இதன் காரணமாக கொடைக்கானல் பெருமாள்மலை, அடுக்கம் வழியாக கும்பக்கரை பெரியகுளம் செல்லும் சாலையில்,

Continues below advertisement

TN Cabinet Meeting: 47 ஆயிரம் பேருக்கு வேலை; அமைச்சரவைக் கூட்டத்தில் 14 புது முதலீடுகளுக்கு ஒப்புதல்

அடுக்கம் பகுதியில் நேற்று மாலை மற்றும் இன்று காலை வேளையில் திடீரென மண் சரிவு ஏற்பட்டுள்ளது, இதன் காரணமாக சாலையில் மண் மற்றும் ராட்ச பெருகற்கள் சாலையில் கிடப்பதாலும்,ஆறு போன்று தண்ணீர் செல்வதாலும் போக்குவரத்து துண்டிப்பு ஏற்பட்டுள்ளது, இதன் காரணமாக இச்சாலை வழியாக செல்லும் சுற்றுலாப்பயணிகள், பொதுமக்கள் செல்ல முடியாமல் மாற்று சாலையில் திரும்பி செல்கின்றனர், மேலும் இப்பகுதியில் விளைவிக்கப்படும் விளை பொருட்கள் வாகனங்களில் கொண்டு செல்ல முடியாமல்,தலை சுமையாக விவசாயிகள் கொண்டு சென்று வருகின்றனர்.

Iranian General Esmail Qaani: இஸ்ரேல் அட்டாக், ஈரானின் குவாட்ஸ் படையின் தளபதி மரணமா? அதிகாரப்பூர்வ அறிவிப்பு

மேலும் வயநாடு போன்று இந்த மண் சரிவு ஏற்பட்டு இருப்பதாக இப்பகுதி மக்கள் அச்சம் அடைந்துள்ளனர், மேலும் இப்பகுதியில் ஏற்பட்டுள்ள மண் சரிவு இரவு நேரத்தில் அகற்றப்படும் என நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர், மேலும் இச்சாலை வழியாக செல்லும் மழை தண்ணீர் ஆறு போன்று வீடுகளை கடந்து செல்கிறது, மேலும் இந்த வீட்டில் ஆட்கள் இல்லாததால் பெரும் சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது,மேலும் இந்த மண் சரிவு ஏற்பட்ட நேரத்தில் இந்த சாலையில் வாகனங்கள் எதுவும் செல்லாததால்  அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் தவிர்க்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.