இந்திய பங்குச்சந்தை சரிவுடன் வர்த்தகமானது. சென்செக்ஸ், நிஃப்டி இரண்டும் 1 சதவீதம் சரிந்து வர்த்தகத்தை தொடங்கியது. மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் பதற்றம் காரணமாக பங்குச்சந்தை சரிவுடன் வர்த்தகத்தை தொடங்கியுள்ளது. 


காலை 9.16 மணி நிலவரப்படி, மும்பை பங்குச்சந்தை குறியீடான சென்செக்ஸ் 877 அல்லது 1% புள்ளிகள் சரிந்து 83,389 ஆகவும், தேசிய பங்குச்சந்தை குறியீடான நிஃப்டி 259 அல்லது 1 சதவீதம் புள்ளிகள் சரிந்து 25,537 ஆக வர்த்தகமாகியது. வர்த்தகம் தொடங்கியதில் இருந்தே பங்குச்சந்தை சரிவுடன் காணப்பட்டது. 620 பங்குகள் ஏற்றத்துடனும் 2,024 பங்குகள் சரிவுடனும் 149 பங்குகள் மாற்றமின்றியும் தொடர்ந்தன. 


காலை 10.40 மணி நிலவரப்படி, மும்பை பங்குச்சந்தை குறியீடான சென்செக்ஸ் 907.20 அல்லது 1.09% புள்ளிகள் சரிந்து 83,351.48 ஆகவும், தேசிய பங்குச்சந்தை குறியீடான நிஃப்டி 725.20 அல்லது 1.07% புள்ளிகள் சரிந்து 25,524.30 ஆக வர்த்தகமாகியது.


மத்திய கிழக்கு நாடுகளான இஸ்ரேல் - ஈரான் இடையே போர் பதற்றம் நிலவி வருவதால் அது ஆசிய பங்குச்சந்தையில் தாக்கத்தை ஏற்படுத்தியது. இஸ்ரேஸ் லெபனான் மீது தாக்குதல் நடத்த தயாராகி வருவதாக தகவல் வெளியாயுள்ளது. இதே நிலை தொடர்ந்தால் அது சர்வதேச பங்குச்சந்தை, இந்திய பங்குச்சந்தையில் சரிவு ஏற்பட காரணமாக இருக்கலாம் என நிபுணர்கள் தெரிவிக்கின்றன. ஆனால், இப்போதைக்கு இந்திய பங்குச்சந்தை கடும் சரிவை சந்திக்க வாய்ப்பில்லை என்பதால் முதலீட்டாளர்கள் அச்சம் கொள்ள தேவையில்லை என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.


லாப - நஷ்டத்துடன் வர்த்தகமான நிறுவனங்கள்:


ஜெ.எஸ்.டபுள்யு ஸ்டீல், டாடா ஸ்டீல், ஓ.என்.ஜி.சி., எஸ்.பி.ஐ., க்ரேசியம், அல்ட்ராடெக் சிமெண்ட், டாக்டர் ரெட்டிஸ் லேப்ஸ், கோல் இந்தியா, பாரத் எலக்ட்ரிக்கல், சிப்ளா ஆகிய நிறுவனங்கள் லாபத்துடன் வர்த்தகமானது. 


ஏசியன் பெயிண்ட்ஸ், ஈச்சர் மோட்டர்ஸ், பி.பி.சி.எல்., ஸ்ரீராம் ஃபினான்ஸ், டாடா மோட்டர்ஸ், லார்சன், ஆக்சிஸ் வங்கி, டாடா கான்ஸ் ப்ராட், பஜாஜ் ஆட்டோ, ஹீரோ மோட்டர்கார்ப், விப்ரோ, ரிலையன்ஸ், பஜாஜ் ஃபின்சர்வ், நெஸ்லே, கோடாக் மஹிந்திரா, அப்பல்லோ மருத்துவமனை, ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி, பவர்கிரிட் காஃப், எஸ்.பி.ஐ. லைஃப் கார்ப், பஜாஜ் ஃபினான்ஸ், ஐ.டி.சி., ஹெச்.சி.எல்.,  டெக், டி.சி.எஸ்., அதானி எண்டர்பிரைசிஸ், ஹெச்.டி.எஃப்.சி. வங்கி, ஹிண்டால்கோ,.டெக் மஹிந்திரா, எம்&எம், என்.சி.பி.சி.,ஹெச்.யு.எல்., சன் ஃபார்மா, என்.டி.பி.சி. அகிய நிறுவனங்கள் நஷ்டத்துடன் வர்த்தகமாகின.