புல்லட் ஓட்டியபடி, கலந்துகொண்டு கல்லூரி மாணவன் தாக்கப்பட்டதை கண்டித்து முழக்கங்களை எழுப்பினர்.
மாணவர் மீது தாக்குதல்
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகேயுள்ள மேலபிடாவூர் கிராமத்தைச் சேர்ந்த அய்யாசாமி (19) என்ற பட்டியலின கல்லூரி மாணவனை கடந்த சில தினங்களுக்கு முன்பு அதே கிராமத்தை சேர்ந்த 3 இளைஞர்கள் ஆயுதங்களால் தாக்கி கைகளில் தாக்கியுள்ளனர். இதில் படுகாயமடைந்த கல்லூரி மாணவர் அய்யாசாமி மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இது தொடர்பாக வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் தாக்குதல் நடத்திய மூன்று இளைஞர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இந்த தாக்குதல் சம்பவம் குறித்து 17ஆம் தேதியன்று தேசிய SC/ ST ஆணையத்தின் இயக்குனர் ரவிவர்மன் தலைமையிலான குழுவினர் விசாரணை நடத்தினர்.
புல்லட் பேரணி நடைபெற்றது
இந்நிலையில் கிராமத்திற்குள் புல்லட் ஓட்டியதால் பட்டியலின கல்லூரி மாணவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறிய நிலையில் மதுரை மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் நேற்று (28.02.2025) மதுரை மாவட்ட நீதிமன்ற பகுதியிலிருந்து காந்தி அருங்காட்சியகம் வரை சமத்துவ புல்லட் பேரணி நடைபெற்றது. இதில் காட்டுமன்னார்கோவில் விசிக சட்டமன்ற உறுப்பினரும், பொதுச்செயலாளருமான சிந்தனை செல்வன் பேரணியை தொடங்கிவைத்து புல்லட் ஓட்டியபடி பேரணியில் கலந்துகொண்டனர். இந்த பேரணியில் பெண்கள் உள்ளிட்ட 200க்கும் மேற்பட்டோர் புல்லட் ஓட்டியபடி, கலந்துகொண்டு கல்லூரி மாணவன் தாக்கப்பட்டதை கண்டித்து முழக்கங்களை எழுப்பினர்.
வழக்குப் பதிவு
இந்நிலையில் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்துதல், போக்குவரத்து இடையூறு செய்தல், அனுமதியின்றி கூடுதல் ஆகிய உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் 170 பேர் மீது தல்லாகுளம் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - Jobs: ரூ.35 ஆயிரம் சம்பளம்.. இந்த டிகிரி படிச்சிருந்தா போதும், சுகாதாரத்துறையில் வேலை !
மேலும் செய்திகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் -பா.ம.க திசைமாறி தலித்துகளுக்கு எதிரான வன்மைத்தை உமிழ்வது வேதனைக்குரியது - சிந்தனைச் செல்வன்