தமிழகம் முழுவதும் கடந்த சில தினங்களாகவே வணிக வரித்துறை சார்பில் வாகன சோதனை  தீவிரப்படுத்தப்பட்டு உரிய ஆவணங்கள் இன்றி பொருட்களை ஏற்றிச்செல்லும் வாகனங்கள், லாரிகள் பறிமுதல் செய்யப்பட்டு அபராதம் வசூல் செய்யப்பட்டு வருகிறது.








இந்நிலையில் மதுரை மாநகர் பகுதியில் செயல்படும் தனியார் அலுமினிய பாத்திர தயாரிப்பு நிறுவனத்தில் இருந்து உரிய அனுமதியின்றி சமையல் பாத்திரங்கள் கடத்தப்படுவதாக வணிகவரித்துறைக்கு கிடைத்த தகவலையடுத்து, மதுரை ரிங்ரோடு சோதனைச்சாவடியில் வாகன சோதனை செய்த போது, மதுரையில் இருந்து சிவகங்கை மாவட்டம் தேவகோட்டைக்கு உரிய அனுமதி இல்லாமல் எந்தவித ஆவணம் இன்றி எடுத்துச்செல்லப்பட்ட  சுமார் 2 லட்சத்து 16 ஆயிரம் மதிப்புள்ள பெரிய அளவிலான இட்லி செய்யும் அலுமினிய சமையல் பாத்திரங்களை எடுத்து சென்ற மினி வேனை வணிகவரி அமலாக்கப்பிரிவு  பறிமுதல் செய்தனர்.

 







 

அதனை அடுத்து சம்பந்தப்பட்ட தனியார் நிறுவனத்தை அழைத்து விசாரணை செய்ததோடு உரிய ஆவணங்கள் இன்றி பொருட்கள் கொண்டு சென்றதற்கு 51 ஆயிரத்து 840 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. அபராதத்தை செலுத்திய பின்னர் மினிவேனை மதுரை மண்டல வணிகவரி அமலாக்கப்பிரிவு துறை அதிகாரிகள் விடுவித்தனர்.