டிஜிட்டல் உலகம் சிகப்பு கம்பளம் விரித்து அனைவரையும் வரவேற்கிறது. அதில் நல்ல விடயங்களை தேர்வு செய்தால் ஆரோக்கியமானவற்றை வழங்குகிறது. அதே நாம் தவறான வழியில் செல்லும் போது சட்ட ரீதியான பிரச்னைகளில் கூட மாட்டிவிடுகிறது. இந்நிலையில் இணையத்தில் அங்கமாக இருக்கும் வாட்சாப்பில் குழுவாக இணைந்து  பலரும் நன்மைகளை செய்து வருகின்றனர். அப்படியான வாட்சாப் குழு தான் பசியாற்றுங்கள் வாட்சப் குழு. தங்களால் முடிந்த பணத்தை வாட்சப் மூலம் திரட்டி சாலை ஓரத்தில் வசிக்கும் மக்களின் பசியை போக்குவது தான் இவர்களின் இலக்கு.






இந்நிலையில் தங்களது நற்பணிகளை விரிவுபடுத்தி கல்வி, மருத்துவம் என பலவற்றிற்கும் சேவை செய்து வருகின்றனர். இந்நிலையில் அரசுப் பள்ளிக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்துகொடுத்து பாராட்டு பெற்றுள்ளனர். சிவகங்கை மாவட்டம் கீழப்பூங்குடியை சேர்ந்த அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில் 436 மாணவர்கள், 450 மாணவிகள் பயின்று வருகின்றனர். கிட்டதட்ட 900 மாணவர்கள் படிக்கும் இந்த பள்ளியில் அதிகளவு கிராமபுற மாணவர்கள் தான் பயின்று வருகின்றனர். இந்த பள்ளியில் படித்த மாணவர்கள் தற்போது நன்கு படித்து நல்ல நிலைக்கு முன்னேறி வருகின்றனர். இந்நிலையில் கீழப்பூங்குடி அரசுப் பள்ளியில் போதுமான சில வசதிகள் இல்லை என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்திருந்தனர். இந்த தகவல் பசியாற்றுகள் எனும் வாட்சப் குழு நண்பர்களுக்கு தகவல் கிடைத்துள்ளது. இந்த சூழலில் வாட்சப் குழுவில் தகவலை பரிமாறிக்கொண்ட நண்பர்கள் பள்ளிக்கு தேவையான உதவிகளை செய்ய முடிவு செய்துள்ளனர்.




அதனடிப்படையில்  பள்ளியின் நூலகத்திற்கு தேவையான 8 ரேக், புத்தகங்கள் மற்றும் மாணவர்கள் வகுப்பில் அமர்ந்து கொள்ள சேர், பெஞ்ச் ஆகிய பொருட்களை வாங்கிக் கொடுத்தனர். இதனால் பசியாற்று வாட்சப் குழு நண்பர்களை கிராம மக்கள் வெகுவாக பாரட்டினர்.






இது குறித்து பசியாற்றுங்கள் வாட்சப்  குழுவை சேர்ந்த ராம்குமார் கூறுகையில்.., " 2018-ஜூன் 1 தேதி வாட்சப் குழு துவங்கினோம். பல்வேறு சமூக ஆர்வலர்களை அதில் இணைத்து தெருவோரத்தில் வசிக்கும் நபர்களுக்கு உணவு வழங்கினோம். தொடர்ந்து கல்வி, மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு தேவைகளை பூர்த்தி செய்து வருகிறோம்.  இந்நிலையில் கீழப்பூங்குடி பள்ளிக்கு தேவையான உதவிகளை செய்தது மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பசியாற்று வாட்சப் குழு நண்பர்கள் மூலம் பல்வேறு செயல்களை சாத்தியப்படுத்துவோம்” என்றார்.


இதை படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - போன மாசம் 2.61 கோடி இந்த மாசம் 2.8 கோடி...! - பழனி கோயில் உண்டியல் காணிக்கையின் முழு விவரம் இதோ...!