பெரியாரை ஏற்கும் போது திராவிடத்தை ஏற்கிறீர்கள். அதை தான் அவர்கள் ஏற்றுக்கொண்டு திராவிடமாடல் என்கிறார்கள் விஜய்க்கு சீமான் பதிலளித்தார்.
மதுரையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய சீமான்...”
விஜயோடு கூட்டணி சேர்ந்து பயணிக்க வாய்ப்பு உள்ளதா என்ற கேள்விக்கு
இருவருக்கும் கொள்கைகள் ஒத்துப் போகவில்லை. திராவிடமும் தமிழ் தேசியமும் இரு கண்கள் என விஜய் சொன்னார் என்றால், அது எங்கள் கொள்கைக்கு நேர் எதிரானது. திராவிடமும் தமிழ் தேசியமும் ஒன்றல்ல அது வேற, இது வேற. இது என் நாடு என் தேசம் இங்கு வாழுகிற மக்களுக்கான அரசியல் தமிழ் தேச அரசியல். விஜய் மற்றும் எங்களது இரு வேறு கொள்கையும் ஒன்றாக இல்லை மற்றபடி நாங்கள் சொன்னதை சொல்கிறார். மொழிக் கொள்கையில் எங்களுக்கு முரண்பாடு உள்ளது. கொள்கை மொழி என்பது எங்கள் தாய் மொழி தான், பாடமொழி பயிற்றுமொழி எல்லா மொழியும் எங்களுக்கு தமிழ் மொழி தான். தேவையென்றால ஒரு மொழியை படித்துக் கொள்ளலாம் அதனை கொள்கையாக எடுத்துக் கொள்வது ஏற்க முடியாது.
விஜயை மக்கள் ஏற்றுக் கொள்ள வாய்ப்பு உள்ளதா?
அதனைப் பொறுத்து தான் பார்க்க வேண்டும். கருத்தியல் புரட்சி மூலமாக தான் மக்களை வென்றெடுக்க முடியும். அதை நீங்கள் எந்த மாதிரியான கருத்துக்களை வைத்து ஒவ்வொன்றுக்கும் பதில் அளிக்க வேண்டும். என்னைப் போன்று செய்தியாளர்களை சந்தித்து பதில் சொல்லி விளக்கம் அளிக்க தெரிய வேண்டும். ஒரு பிரச்னைக்கு வேரும், தீர்வும் தெரிய வேண்டும்.
பாஜக பாசிசம் திராவிட மாடல் எதிரி என்ற விஜயின் பேச்சு குறித்த கேள்விக்கு
பெரியாரை ஏற்கும் போது திராவிடத்தை ஏற்கிறீர்கள் அதை தான் அவர்கள் ஏற்றுக்கொண்டு திராவிடமாடல் என்கிறார்கள். நாங்கள் அதனை திருட்டு மாடல் தீஞ்சு போன மாடல் என்கிறோம்.
விஜய் உதயநிதி ஸ்டாலின் என தேர்தல் களம் மாறுமா? என்ற கேள்விக்கு
நாங்கள் எல்லாம் குறுக்க கோடு போட்டு ஆடிக் கொண்டிருப்போமா என்றார்.
யார் விஜயை பார்த்து பயப்படுகிறார்கள் என்ற கேள்விக்கு?
யாரும் பயப்பட மாட்டார்கள். என்னை பார்த்து பயப்படுகிறார்கள் என்றால் இந்திய திராவிட என்ற கோட்பாட்டிற்கு எதிரானவன் நான் இது இரண்டுமே என் இனத்திற்கு எதிரானது. திராவிடம் என்பது இந்தியத்தின் கூட்டாளி, இதனை நான் சொல்லவில்லை. முத்துராமலிங்கத் தேவர் ஆரியமும் திராவிடமும் வெவ்வேறு அல்ல ஒன்று தான், ஒரு நாள் கட்டிப்பிடித்து கைகுலுக்கு சங்கமிப்பார்கள் என்று கூறியிருக்கிறார். நான் தமிழன் என்றவுடன் இருவரும் ஒரே நேரத்தில் எதிர்க்கிறார்கள் கோட்பாட்டு அளவில் நாங்கள் இந்திய அரசியலில் திராவிட அரசியலுக்கு எதிரானவர்கள். ஏனென்றால் திராவிடம் எங்களுடன் தமிழ் பேசிக்கொண்டு என் மொழியை அழிக்கும் தமிழர் , தமிழர் உரிமை என பேசிக்கொண்டு எங்களுடைய உரிமையை அழிக்கும் சிதைக்கும். மக்களை பாதிக்கும் தொழிற்சாலைகளை கொண்டு வந்தது யார் திணித்தது யார் காங்கிரஸ் பாஜக தான். இவைகளை எதிர்ப்பும் இல்லாமல் காலூன்ற அனுமதித்தது திமுக தான்” என்றார்.
இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - தலைவரே தலைவரே.. மாநாடு பட ஸ்டைலில் செல்லூரில் செல்லூர் ராஜூவிடம் பேசிய அமைச்சர் மூர்த்தி