தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தை சேர்ந்த தந்தை மகனான ஜெயராஜ் - பென்னிக்கிஸ் கடந்த கடந்த 2020-ம் வருடம் ஜூன் 19-ம் தேதி போலீஸ் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட நிலையில் விசாரணையின் போது போலீசார் தாக்கியதில் தந்தை மகன்உயிரிழந்தனர். இருவர் உயிரிழந்தது தொடர்பாக எழுந்த குற்றச்சாட்டின் கீழ் தொடரடப்பட்ட வழக்கில் சாத்தான்குளம் காவல்நிலைய ஆய்வாளர் ஸ்ரீதர், சார்பு ஆய்வாளர்கள் பாலகிருஷ்ணன், ரகுகணேஷ் உள்ளிட்ட ஒன்பது பேரின் மீது சி.பி.ஐ தரப்பில் குற்றபத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இந்நிலையில் இந்த வழக்கு விசாரணையானது இன்று மதுரை மாவட்ட முதலாவது கூடுதல் நீதிமன்றத்தில் நீதிபதி பத்மநாபன் முன்பாக விசாரணைக்கு வந்த நிலையில் வழக்கில் கைது செய்யப்பட்ட ஒன்பது பேரும் நேரில் ஆஜர்படுத்தப்பட்டனர். பின்னர் இந்த வழக்கில் சாட்சியான சாத்தான்குளம் அரசு மருத்துவமனை செவிலியரான கிருபை திரேனப்பு நீதிபதி முன்பாக சாட்சியம் அளித்தார்.
இதை சற்று கவனிக்கவும் - *Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் ABPநாடு செய்திகளை உடனுக்குடன் பெற https://bit.ly/2TMX27X*