ஒவ்வொரு மாதத்தின் 5  நாட்களும் சபரிமலை ஐயப்பன் கோயிலின் நடை திறக்கப்படுவது வழக்கம். சபரிமலையில் ஐயப்பனுக்கு 41 நாட்கள் நடைபெற்ற சிறப்பு பூஜைகளுக்கு பின்னர் தங்க அங்கி அணிவிக்கப்பட்டு மண்டலபூஜை நடைபெறும். இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சரண கோஷத்துடன் தரிசனம் செய்வார்கள்.


சபரிமலை செல்ல பொதுவாக நிலக்கல் வந்து அங்கிருந்து அரசு பேருந்தில் ஏறி பம்பை நதிக்கு சென்று, அங்கிருந்து சுமார் 7 கிலோமீட்டர் தூரம் மலை உச்சியில் ஏற வேண்டும். இந்த பாதைதான் பல ஆண்டுகளாக இருந்து வருகிறது. பெரும்பாலான ஐயப்ப பக்தர்கள் இந்த பாதையில் செல்வார்கள். இதேபோல் எரிமேலியில் இருந்து சபரிமலைக்கு பெருவழிப்பாதையிலும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பல மணி நேரம் நடந்து வர செல்வர்.


Sabarimala: ஐயப்ப பக்தர்கள் சபரிமலைக்கு கருப்பு நிறத்தில் ஆடை அணிந்து செல்வது ஏன்? படிங்க


இந்த இரண்டு பாதையை தாண்டி, மற்ற இரண்டு பாதைகள் உள்ளன. இரண்டு பாதைகளுமே மிக எளிதான பாதைகளாகும். இடுக்கி மாவட்டம் வண்டிப்பெரியார் அருகில் சத்திரம், புல்லுமேடு ஆகிய 2 மலைப்பாதைகள் வழியாக சபரிமலைக்கு செல்ல முடியும். ஒவ்வொரு ஆண்டும் சபரிமலை சீசனையொட்டி இந்த 2 பாதைகளும் ஐயப்ப பக்தர்கள் பாதயாத்திரை செல்வதற்காக திறந்துவிடப்படுவது வழக்கமாகும். அதன்படி, சில தினங்களுக்கு முன்பு முதல் சத்திரம், புல்லுமேடு மலைப்பாதைகள் திறக்கப்பட்டன.


AR Rahman Net Worth: 57 வயதில் மனைவியை பிரியும் இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமானின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?




தற்போது இந்த ஆண்டு சபரிமலை யாத்திரை கார்த்திகை 1ம் தேதி முதல் மண்டல பூஜைக்கான சீசன் தொடங்கிய முதல் மூன்று நாட்களில் சுமார் 1,500 பேர் வனப் பாதையில் கோயிலுக்குச் சென்றுள்ளனர். வரும் நாட்களில் இந்த வழித்தடங்களில் அதிக பக்தர்கள் வருவார்கள் என வனத்துறை தெரிவித்துள்ளது. பெரியாறு புலிகள் காப்பகத்தின் சுற்றுச்சூழல் மேம்பாட்டுக் குழுவால் வழித்தடங்களில் அடிப்படை வசதிகள் மற்றும் கடைகளைத் திறப்பது ஆகியவை நிர்வகிக்கப்படுகின்றன. பக்தர்களின் வருகையை கருத்தில் கொண்டு, வனத்துறையினர், யாத்திரை துவங்கும் சில நாட்களுக்கு முன், அப்பகுதியை சுத்தம் செய்தனர்.


கோயிலுக்கு செல்ல இரண்டு பாரம்பரிய 'கானநபாதா' அல்லது மலையேற்ற வழிகள் உள்ளன


1) எருமேலி - பேரூர்தோடு - கொய்காக்கல்காவு - அழுகடவ் - கரிமலை - செரியானாவட்டம் - வலியானவட்டம் வழியாக பம்பாவை அடையலாம். மாலை 4 மணிக்கு மேல் இந்த வழியில் பக்தர்கள் அனுமதிக்கப்படுவதில்லை.


2) வண்டிப்பெரியார் - சத்திரம் - புல்லுமேடு பாதை. வனத்துறை மற்றும் காவல்துறையினரால் சோதனை நடத்தப்படும். இங்கு மெய்நிகர் வரிசையில் முன்பதிவு செய்யும் வசதியும் உள்ளது. சத்திரத்திலிருந்து கோவிலுக்கான தூரம் சுமார் 12 கி.மீ. கூகுள் மேப்பில் காட்டப்பட்டுள்ள புல்லுமேடு, அய்யப்பன்கோவில் ஊராட்சிக்கு அருகில் உள்ள அதே பெயரில் உள்ள மற்றொரு இடமாக இருக்கலாம். சரியான பாதை குமளி-குட்டிக்கானம் திசையில் உள்ளது. ஆனைவிலாசம் பாதையில் செல்ல வேண்டாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.