கோவில்பட்டி - கடம்பூர் ரயில் நிலையங்கள் இடையே 22 கி.மீ இரட்டை ரயில் பாதை பணிகள் நிறைவடைந்து உள்ளன. இந்த புதிய மின்மய இரட்டை ரயில் பாதையில் தெற்கு ரயில்வே தலைமை முதன்மை மின் பொறியாளர் ஏ.கே. சித்தார்த்தா செவ்வாய் கிழமை (10.01.2023) இன்று ஆய்வு செய்தார். கடம்பூர் ரயில் நிலையத்திலிருந்து சிறப்பு ஆய்வு ரயில் மூலமாக காலை 10.30 மணிக்கு ஆய்வை துவக்கினார்.



 

வழியில் ரயில்வே கேட்டுகள்,  கடம்பூர் உபமின் நிலையம், தமிழ்நாடு மின்சார வாரிய மின்தடை குறுக்கீடுகள் ஆகியவற்றை ஆய்வு செய்தார். அவருடன் கூடுதல் கோட்ட ரயில்வே மேலாளர் தண்ணீரு ரமேஷ் பாபு, முதன்மை மின் வழங்கல் பிரிவு பொறியாளர் சுந்தரேசன், மின் மயமாக்கல் பிரிவு பொது மேலாளர் ராமநாதன், ரயில் விகாஸ் நிகம் லிமிடெட் முதன்மை திட்ட மேலாளர் கமலாகர ரெட்டி, மதுரை கோட்ட மின்மயமாக்கல் பொறியாளர் பச்சு ரமேஷ் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்தப் புதிய இரட்டை ரயில் பாதையை நாளை புதன்கிழமை பெங்களூர் தென் சரக ரயில்வே பாதுகாப்பு ஆணையர் அபய் குமார் ராய் ஆய்வு செய்ய இருக்கிறார்.

 

மேலும் ரயில்வே செய்திகள்

 

திருப்பதி ராமேஸ்வரம் விரைவு ரயிலின் இணை ரயிலான  ராமேஸ்வரம் - மதுரை சிறப்பு ரயில் (06780) மறு அறிவிப்பு வரும் வரை மண்டபத்தில் இருந்து இயக்கப்படும்.








ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண