மதுரை மத்திய சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட  அன்சாரி நகர் பள்ளிவாசலில் நடைபெற்ற ரமலான் இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சியில் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பங்கேற்றார்.  இஸ்லாமியர்களின் அடையாளமான தொப்பியை அணிந்து இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில் நிதியமைச்சர் கலந்து கொண்டு நோன்பு கஞ்சி பருகினார். இதனை அடுத்து பேசிய அவர், மதசார்பற்ற நாடு நம் நாடு, அதற்கு சான்றாக இருக்கும் கட்டமைப்பாக நம் தமிழ்நாடு உள்ளது. தொழில், வாழ்க்கை, கல்வி என அனைத்திலும்  மத சார்பு இல்லாமல் சகோதரத்துவ மனப்பான்மையுடன் உணர்வுடன் செயல்பட்டு வருகிறோம். திராவிட இயக்கத்திற்கு முக்கியமான சத்தியவாதியாக திகழ்ந்தவர் தந்தை பெரியார். இஸ்லாமியர்கள் நடத்திய சி.ஏ.ஏ சட்ட எதிர்ப்பு போராட்டத்தில் கலந்து கொண்ட தன் மீது வழக்குப்பதிவு செய்ததை பெருமையாக கருதுகிறேன். மதவாத சக்திகள் எத்தனை முயற்சி எடுத்தாலும் தமிழ்நாட்டில் நிலவும் நல்லிணக்கத்தை ஒரு சதவிகிதம்கூட அசைத்துப் பார்க்க முடியாது.





 

அதே போல் மதுரை பாத்திமா கல்லூரியில் நடைபெற்ற தேசிய இளைஞர் பாராளுமன்ற விழாவில் நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் பங்கேற்று சிறப்புரை ஆற்றினார்.  தொடர்ந்து விழாவில் பேசிய நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன், பெண்களுக்கான கல்வி, சொத்துரிமை, வேலைவாய்ப்பு எந்த அளவுக்கு அளவுகோலுடன் இருக்கிறதோ, அப்போது சமூகம் முன் மாதிரியான சமூகமாக இருக்கும்.  சமுதாயம் முன்னேறி உள்ளது என்பதை நாம் எந்தளவுக்கு மனிதநேயம் அனுதாபம் காட்டுகிறோமே அதை வைத்து தான் முன்னேறிய சமுதாயமாக கருத முடியும். பல நூற்றண்டுகளாக, என் தாத்தா அப்பா காலத்தில் இருந்து கல்வி, மருத்துவத்திற்கு கிறிஸ்தவர்கள் பங்களிப்பு செய்து வருகின்றனர். என் குடும்பத்தினர் வழிநின்று அச்சேவையில் நானும் என்னை இணைத்துக்கொள்கிறேன்” என்றார்.



 

தொடர்ந்து கல்லூரி மாணவி ஒருவரின் கேள்விக்கு நிதியமைச்சர் பதில் அளித்து பேசுகையில்,..,” கடந்த 25 ஆண்டுகளாக வரி மூலம் கிடைக்கும் வருவாய் பங்கு குறைந்து கொண்டே வருகிறது. தமிழகத்திற்கு கொடுக்கவேண்டிய நிதி குறைந்து கொண்டே வருகிறது. கடந்த 20 ஆண்டுகளாக தமிழகத்திற்கு கொடுக்க வேண்டிய நிதி குறைந்து வருவதால் ஏழை இன்னும் ஏழையாகவும், பணக்காரன் இன்னும் பணக்காரனாக இருக்கும் நிலை உள்ளது. பணக்கார மாநிலங்களில் நிதியை எடுத்து ஏழை மாநிலத்திற்கு கொடுத்து வருகிறோம். உத்திரபிரதேசம், பீகார் மாநிலத்திற்கு மட்டுமே பணம் கொடுக்கப்படும் நிலை உள்ளது.  கல்வியில் முன்னேறவில்லையென்றால் கொடுக்காவிட்டால் ஒரு மாநிலம் எப்படி முன்னேற முடியும்? நிதியமைச்சராக சொல்கிறேன் பணம் என்பது முக்கியமானது அல்ல. கலாச்சாரம், சம உரிமை, திறமையை வளர்த்துக்கொள்ள கல்வி, மற்றும் அதற்கான பயிற்சியை வழங்குவது தான் முக்கியமானது.



 

படித்தால் என்ன படிக்காவிட்டால் என்ன மக்கள் ஆதரவு இருந்தால் சட்டமன்றத்திலோ நாடாளுமன்றத்திலோ இடம் கிடைக்கும். இது தான் ஜனநாயகத்தின் சக்தி. நான் என் அப்பாவுக்கு மகனாக இருந்திருக்காவிட்டால் தேர்தலில் வெற்றி பெற்றிருப்பேனே என்றே எனக்கு தெரியாது. நான் தேர்தலில் பணம் கொடுக்காமல் வென்றேன். 15 ஆவது நிதிக்குழு யாருக்கு என்ன கொடுக்க வேண்டும் என்பதை தெளிவாக கூறுகிறது. எந்த வேறுபாடு இல்லாமல், அது மனிதருக்குள்ளோ, மிருகங்களுக்குள்ளோ ஆனாலும் கூட, குறிப்பாக இந்த பட்ஜெட்டில் கூட 20 கோடி ரூபாய் கைவிடப்பட்ட நாய்கள் பூனைகளுக்கு அரசு செலவிடும் என பாகுபாடு இல்லாமல் செய்துள்ளோம். இது தான் சமுதாயத்தின் அடையாளம். சமுதயத்தின் கடமை, அரசியல் கடமை, அரசியல்வாதியின் கடமையை நூறாண்டுகளாக தொடர்ந்து சிறப்பாக செய்வதால் தான் தமிழ்நாடு வளர்ந்து வருகிறது. நான் சமூகத்தில் பெரிய மனிதனாக வந்தது வித்தை இல்லை.  என் தாத்தா படித்தவர் பணக்காரர். அதனால் எனக்கு அது பெரிய விஷயமில்லை. ஆனால் கலைஞர் கருணாநிதி கல்லூரியிலோ பள்ளியிலோ படித்தவர் இல்லை. ஆனால் திறமையால் சுயேச்சையாக முன்னேறியவர். அதேபோல தான் திராவிட இயக்கமும் சுயேச்சையான தனித்துவத்தால் தான் தொடர்ந்து முன்னேறி வருகிறது என பேசினார்.