மதுரை மாநகராட்சியின் முதல் மேயரான முத்துவின் மனைவி ரஞ்சிதம் முத்து. இவர் நியூசிலாந்தில் வசிக்கும் அவரது மூத்த மகனுடன் வசித்து வருகிறார். 88 - வயதான இவர் கடந்த 2-ம் தேதி வயது முதிர்வு காரணமாக காலமானார்.  இந்நிலையில் அவரது உடல் சொந்த ஊரான மதுரைக்கு கொண்டு வர முடியாத சூழல் ஏற்பட்டதால் நியூசிலாந்தில் வைத்து அவரது உடலுக்கு இறுதி சடங்கு மற்றும் நல்லடக்கம் நடைபெற்றது. உறவினர்களும் நியூசிலாந்திற்கு செல்ல முடியாத நிலையில் காணொளியில் இறுதி சடங்கு மற்றும் நல்லடக்கத்தை நேரலை  காண ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில் இந்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் அதிகளவு பகிரப்பட்டு வருகிறது. 






கொரோனோ பரவல் காரணமாக  உறவினர்களும் நியூசிலாந்திற்கு செல்ல முடியாத நிலையில் காணொளியில் இறுதி சடங்கு மற்றும் நல்லடக்கத்தை நேரலையை ஏராளமானர் பார்வையிட்டு அஞ்சலி செய்தனர். மதுரை கரிமேடு பகுதியில் ஒரு தனியார் திருமண மண்டபத்தில்  மெகா எல்.இ.டி திரை முன்பு இருந்தபடி அவரது உறவினர்கள் கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.



சில நாட்களுக்கு முன்பு கொரோனா எதிரொலியால்  உறவினர்கள திருமண வாழ்த்துக்களை காணொளியில் கூறிய நிலையில் மதுரையில் நியூசிலாந்தில் இறந்த பிறகு காணொளி மூலம் அஞ்சலி செலுத்தியது குறிப்பிடதக்கது.

 

இது குறித்து உறவினர்கள்..,”கொரோனா காலகட்டத்தில் பலமாற்றங்கள் ஏற்பட்டுவிட்டது. பணம், காசு இருந்தாலும் எதையும் சாதித்துவிடலாம் என்ற சமூகத்தில் இருக்கும் நோக்கம் இப்படியான சம்பவங்கள் மூலம் உடைத்து விடுகிறது. உறவினர்கள் பலர் இருந்தாலும் நேரில் சென்று அஞ்சலி செலுத்த முடியவில்லை. உடலை ஊருக்கு கொண்டுவரலாம் என்றால் அதற்கு வழியில்லாமல் போயிற்று. எனினும் இணையத்தின் மூலமாக அஞ்சலி செலுத்த முடிந்தது. கொரோனா பரவல் முற்றிலுமாக முடியவேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது” என்றார்.