சித்ரா பெளர்ணமி விழாவின் அங்கமாய் தமிழக - கேரள எல்லையில் தேக்கடி பெரியார் புலிகள் சரணலாயத்தின் அருகே மிகவும் பழமை வாய்ந்த வரலாற்று சிறப்புமிக்க கண்ணகி கோவில் அமையபெற்றுள்ளது. இங்கு ஆண்டுதோறும் சித்திரை பெளணர்மி நாளில் கோவில் விழா சிறப்பிக்கப்படுவது வழக்கமாகும். அதன்படி இந்தாண்டும் இன்று (ஏப்- 23 ஆம் தேதி) விழா சிறப்பிக்கப்படுகின்றது.
கல்யாண வீட்டுக்கும் கருமாதி வீட்டுக்கும் சண்டை! போர்க்களமாகிய நெல்லை! நடந்தது என்ன?
இந்நிலையில் கண்ணகி கோவிலுக்கு நடந்து செல்லும் பக்தர்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. அதன்படி இன்று காலை 3-மணிமுதல் மதியம் 2.30 மணிவரை மட்டுமே பக்தர்கள் கண்ணகி கோவிலுக்கு செல்ல அனுமதிக்கப்படுவர்கள். தொடந்து மாலை 5.30 மணிக்கு கண்ணகி கோவிலிருந்து பக்தர்கள் வெளியேற வேண்டும். மேலும் fitness சான்று வழங்கப்பட்ட நான்கு சக்கர வாகனங்கள் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றன.
Lord Kallazhagar: ”வாராரு வாராரு அழகர் வாராரு” - பச்சை பட்டுடுத்தி வைகை ஆற்றில் இறங்கினார் கள்ளழகர்!
இருசக்கர வாகனங்களுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை. கண்ணகி கோவிலுக்கு இயக்கப்படும் வாகனங்களுக்கு ஆவணங்கள் அனைத்தும் சரிபார்க்கப்பட்டு சான்று வழங்கப்பட்டுள்ளதற்கான நோட்டீஸ் வாகனங்களில் ஒட்டப்பட்ட பின்பே வனப்பகுதிக்குள் செல்ல அனுமதிக்கப்படுகிறது.
இந்த சூழலில் தமிழக - கேரள எல்லையில் உள்ள கண்ணகி கோவிலுக்கு அதிகாலை சென்ற கண்ணகி அறக்கட்டளையினர் வாகனத்தை கேரள வனத்துறை மற்றும் காவல் துறையினர் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. கண்ணகி கோயில் இங்கு ஆண்டுதோறும் சித்ரா பௌர்ணமி அன்று சித்தரை முழு நிலவு விழா கொண்டாடப்படுகிறது.
இதற்காக அதிகாலை 3 மணிக்கு கண்ணகி அறக்கட்டளை சார்பாக பூஜைகள் செய்ய பூஜை பெருட்கள் எடுத்து சென்ற வாகனத்தை கேரள வனத்துறை மற்றும் காவல் துறை அதிகாரிகள் தடுத்து நிறுத்தியதால் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர் . இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் அனுமதி சீட்டு வாங்கிய பின்பே பூஜை பொருட்களைக் கொண்டு செல்ல கேரள வனத்துறை அனுமதித்தது. கொளுத்தும் வெயிலிலும் பக்தர்கள் கோயிலுக்குச் சென்றனர்.
கண்ணகி கோவிலுக்கு தமிழக வனப்பகுதி வழியாக செல்லும் கூடலூர் அருகேயுள்ள வண்ணாத்திப்பாறை மலையில் உள்ள மங்கலதேவி கண்ணகி கோயிலில் இன்று சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு சித்திரை முழுநிலவுத் திருவிழா கொண்டாடப்பட்டது.
இதற்காக தமிழகத்தின் பளியங்குடி மலைப்பாதையில் 6.6 கி.மீ. தூரம் நடந்து செல்கின்றனர். மேலும் கேரளாவின் குமுளி கொக்கரக்கண்டம் மலைப் பாதையில் ஜீப் மூலமாக மங்கலதேவி கண்ணகி கோயிலுக்கு பக்தர்கள் செல்கின்றனர். இத்திருவிழாவை முன்னிட்டு தமிழகம் மற்றும் கேரள மாநில போலீஸார், வனத்துறையினர் மற்றும் தீயணைப்பு சுகாதாரத் துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.