கப்பலூர் டோல்கேட்டை அகற்ற பலமுறை அரசு கவனத்திற்கு எடுத்துச் சென்றும் இன்னமும் தீர்வு காணப்படவில்லை என்று முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டு வைத்துள்ளார்.
மதுரை திருமங்கலம் டோல்கேட்
திருமங்கலத்தில் டோல்கேட் பிரச்னை தொடர்பாக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ஆர்.பி உதயகுமாரிடம் பல்வேறு அமைப்பு சேர்ந்தவர்கள் மனு அளித்தனர். இதனை தொடர்ந்து ஆர்.பி. உதயகுமார் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தென்தமிழகத்தில் நுழைவுப் பகுதியான திருமங்கலம் தொகுதி கப்பலூர் டோல்கேட் விதிமுறை அமைக்கப்பட்டுள்ளது. இதை அகற்ற வேண்டும் என்று மக்களின் கோரிக்கையாக உள்ளது. இதே எதிர்க்கட்சித் தலைவராக இருந்த பொழுது ஸ்டாலின் நான் கப்பலூர் டோல்கேட்டை அகற்ற பாடுபடுவேன் என்று கூறினார். அதனுடைய வீடியோ குறிப்பு தற்போது வலைதளங்களில் பரவி வருகிறது. 3 ஆண்டுகள் ஆகியும் கொடுத்த வாக்குறுதியை பற்றி தற்போது வாய் திறக்க மறுத்து வருகிறார். இதுகுறித்து நாங்கள் போராடினால் எங்கள் மீது பொய் வழக்கு தொடுத்து கைது செய்யும் சூழ்நிலை உள்ளது.
அரசு அக்கறை செலுத்தவில்லை
தற்போது உள்ளூர் வாகன ஒட்டிகளுக்கு 2 லட்சம் முதல் 12 லட்சம் வரை அபதாரம் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. தற்பொழுது உள்ளூர் வாகனங்கள் 50% கட்டணத்துடன் செல்ல வேண்டும், என்று செய்தி வெளிவந்தது. இதனால் மக்கள் அச்சமடைந்துள்ளனர். அனைத்து மக்களும் போராட தூண்டும் வகையில் உள்ளது. இதே எடப்பாடியார் ஆட்சி காலத்தில் மத்திய அரசிடம் பேசி உள்ளூர் வாகனங்களுக்கு கட்டண சலுகை அளிக்கப்பட்டது. தற்பொழுது முற்றிலும் அகற்றப்பட வேண்டும் என்று அனைத்து தரப்பு மக்கள், தொழிலாளர்கள், பல்வேறு சங்கங்கள், தொழில் நிறுவனங்கள் ஆகியோர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். ஆனால் மக்களிடத்தில் அரசு அக்கறை செலுத்தவில்லை. இதன் மூலம் கடையடைப்பு போராட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு போராட்டங்கள் நடைபெற்றது. ஏற்கனவே உள்ளூரில் சாலைகளை அடைத்தார்கள் மக்கள் போராட்டத்தின் பின்பு அது திறக்கப்பட்டது இந்த அரசு மக்கள் பிரச்னைக்கு அக்கறை செலுத்தவில்லை. மத்திய அரசு ஏற்கனவே 60 கிலோமீட்டர் உள்ள டோல்கேட்டை அகற்றப்படும் என்று கூறியுள்ளார்கள். அதை பயன்படுத்தி மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்து செய்திருக்க வேண்டும், ஆனால் அதை அரசு செய்யவில்லை. கப்பலூர் டோல்கேட் அகற்ற பலமுறை அரசுக்கு கவனத்திற்கு எடுத்துச் சென்றும் இன்னமும் தீர்வு காணப்படவில்லை. கப்பலூர் டோல்கேட் பிரச்னையில் நாங்கள் மக்களுக்கு உறுதுணையாக எடப்பாடியாரிடம் அனுமதி பெற்று மக்களுடன் இணைந்து, போராட்டங்களுக்கு நாங்கள் இணைந்து தீர்வு காண போராடுவோம். ஸ்டாலின் எதிர்க்கட்சியாக இருக்கும் போது ஒரு பேச்சும், ஆளுங்கட்சியாக இருக்கும் போது ஒரு பேச்சு என்பது போல உள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - Madurai: "20 கோடி கிடைக்கும்" - சதுரங்க வேட்டை திரைப்பட பாணியில் ரூ.18 லட்சம் மோசடி!
மேலும் செய்திகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் - மதுரை கோட்டத்தில் ஒரே மாதத்தில் ரயில் படிக்கட்டுகளில் பயணம் செய்த 8 பேர் பலி.. 6 பேர் காயம்