பெரியகுளம் அருகே ஜி.கல்லுப்பட்டி பகுதியில் உள்ள ஜெராக்ஸ் & கூழ் கடைக்குள்  கையில் அரிவாள் மற்றும் கத்தியுடன் மர்ம நபர்கள் சிலர் புகுந்து கொலை வழக்கு உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய ஒருவரை கொலை செய்ய முயற்சி , போலீசார் குவிப்பு - CCTV காட்சிகள் வெளியாகி பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.




கொலை, உள்ளிட்ட  10க்கும் மேற்பட்ட வழக்குகளில் தொடர்புடையவரும் இரண்டு முறை குண்டர் சட்டத்தின் கீழ்  சிறை சென்ற செல்வம் என்பவரை அரிவாள், கத்தி உள்ளிட்ட ஆயுதங்களுடன் மர்ம நபர்கள் தாக்க முயற்சி.ஆயுதங்களுடன் விரட்டிய நபர்களிடமிருந்து  உயிர் தப்பிய நிலையில் கொலை வெறி தாக்குதலுக்கு வந்த நபர்களை கைது செய்யக்கோரி செல்வத்தின் உறவினர்கள் சாலை மறியல் காவல்துறையினர் குவிப்பு. தேவதானப்பட்டி காவல்துறையினர் சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்து ஆயுதங்களுடன் வந்த நபர்களை தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர்.



தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள ஜி.கல்லுப்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட  பகுதியில் வசித்து வருபவர் செல்வம் என்பவருக்கு திருமணமாகி மங்கையர்க்கரசி என்ற மனைவியும், நிஷாத்ராஜ்,  கிஷாந்த் என்ற இரண்டு மகன்களும் ரீனா என்ற ஒரு மகளும் உள்ளனர்.இந்நிலையில இன்று செல்வம் ஜி.கல்லுப்பட்டி பகுதியில் நடத்திவரும் ஜெராக்ஸ் மற்றும் கம்மங் கூழ் கடையில் இருந்த போது அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் மூன்று  இருசக்கர வாகனத்தில் வந்த நபர்கள் அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களுடன் செல்வம் என்பவர் கடைக்குள் புகுந்து வெட்ட முயற்சித்த போது செல்வம் தப்பி ஓடியதாக கூறப்படுகிறது.இந்நிலையில் ஆயுதங்களுடன் செல்வத்தை துரத்தி செல்வதை கண்ட பொதுமக்கள் தடுத்து மடக்கி நிறுத்த முயற்சித்த போது  வந்த மர்ம நபர்கள் இருசக்கர வாகனத்தில் தப்பி ஓடி உள்ளனர்.




இதனைத் தொடர்ந்து  செல்வம் மற்றும் அவரது உறவினர்கள் கெங்குவார்பட்டி - வத்தலகுண்டு சாலையில்  ஆயுதங்களுடன் தாக்க வந்த நபர்களை கைது செய்ய கோரி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.இதனை அடுத்து அங்கு வந்த தேவதானப்பட்டி  காவல்துறையினர் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து  இருசக்கர வாகனத்தில் ஆயுதங்களுடன் தாக்க வந்த நபர்கள் குறித்து  விசாரணை மேற்கொண்டுள்ளதோடு வழக்கு பதிவு செய்துள்ளனர். இதனைத் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட நபர்களிடம் காவல்துறையினர் பேச்சு வார்த்தை நடத்தியதை தொடர்ந்து சாலை மறியல் போராட்டத்தை கைவிட்டனர்.


மேலும் செல்வம் மற்றும் அவரது மகன் ரிசாத் ராஜ் மீது  தேவதானப்பட்டி  காவல் நிலையத்தில் கடந்த ஓராண்டுக்கு முன்பு நடைபெற்ற கொலை வழக்கு உள்ளிட்ட 10கும் மேற்பட்ட  பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளதாகவும், செல்வம் மற்றும் அவரது மகன் இருவரும் குண்டர் சட்டத்தின் கீழ் இரண்டு முறை சிறை சென்றுள்ள  நிலையில் இன்று ஆயுதங்களுடன் செல்வத்தை தாக்க வந்தது  முன்விரோதம் காரணமாக இருக்கலாம் என காவல்துறையினர் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.மேலும் ஆயுதங்களுடன் வந்த நபர்கள் யார்? இவர்கள் கூலிப்படையை சேர்ந்தவர்களா? என்று பல்வேறு கோணங்களில் தனிப்படை அமைத்து தேவதானப்பட்டி  காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.