ராமேஸ்வரம் - ஹுப்ளி ரயில் சேவை நீடிப்பு
பெங்களூர் அருகே உள்ள எஸ்வந்த்பூர் வழியாக இயக்கப்படும் ராமேஸ்வரம் - ஹுப்ளி - ராமேஸ்வரம் வாராந்திர ரயில் சேவை டிசம்பர் மாதம் வரை இயக்கப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது இந்த ரயில் சேவை மீண்டும் மூன்று மாதங்களுக்கு மார்ச் மாதம் வரை நீட்டிப்பு செய்யப்படுகிறது. அதன்படி சனிக்கிழமைகளில் காலை 06.30 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 06.15 மணிக்கு ராமேஸ்வரம் வந்து சேரும் ஹுப்ளி - ராமேஸ்வரம் வாராந்திர எக்ஸ்பிரஸ் (07355) ஜனவரி 6 முதல் மார்ச் 30 வரை இயக்கப்படும்.
மறு மார்க்கத்தில் ராமேஸ்வரத்திலிருந்து ஞாயிற்றுக்கிழமைகளில் இரவு 09.00 மணிக்கு புறப்பட்டு மறுநாள் இரவு 07.25 மணிக்கு ஹுப்ளி சென்று சேரும் ராமேஸ்வரம் - ஹுப்ளி வாராந்திர எக்ஸ்பிரஸ் (07356) ஜனவரி 7 முதல் மார்ச் 31 வரை இயக்கப்படும். இந்த ரயில்களுக்கான பயணச்சீட்டு முன்பதிவு தற்போது நடைபெற்று வருகிறது.
இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - Rajinikanth: "எல்லாருக்கும் மகிழ்ச்சியான ஆண்டாக அமையட்டும்” - ரசிகர்களை சந்தித்து ரஜினி புத்தாண்டு வாழ்த்து..!
மேலும் செய்திகள் படிக்க - Odavum Mudiyadhu Oliyavum Mudiyadhu: காமெடி- பேய் ஜானரில் கோபி - சுதாகர்.. “ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது” பட விமர்சனம்!