வாராந்திர ரயில் சேவை

Continues below advertisement


பெங்களூர் அருகே உள்ள எஸ்வந்த்பூர் வழியாக இயக்கப்படும் ராமேஸ்வரம் - ஹுப்பாளி - ராமேஸ்வரம் வாராந்திர ரயில் சேவை மார்ச் மாதம் வரை இயக்கப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது இந்த ரயில் சேவை மீண்டும் மூன்று மாதங்களுக்கு ஜூன் மாதம் வரை நீட்டிப்பு செய்யப்படுகிறது. அதன்படி சனிக்கிழமைகளில் காலை 06.30 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 06.15 மணிக்கு ராமேஸ்வரம் வந்து சேரும் ஹுப்பாளி - ராமேஸ்வரம் வாராந்திர எக்ஸ்பிரஸ் (07355) ஏப்ரல் 6 முதல் ஜூன் 29 வரை இயக்கப்படும். மறு மார்க்கத்தில் ராமேஸ்வரத்திலிருந்து ஞாயிற்றுக்கிழமைகளில் இரவு 09.00 மணிக்கு புறப்பட்டு மறுநாள் இரவு 07.25 மணிக்கு ஹுப்பாளி சென்று சேரும் ராமேஸ்வரம் - ஹுப்பாளி வாராந்திர எக்ஸ்பிரஸ் (07356) ஏப்ரல் 7 முதல் ஜுன் 30 வரை இயக்கப்படும். இந்த ரயில்களுக்கான பயணச்சீட்டு முன்பதிவு தற்போது நடைபெற்று வருகிறது.