வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் வழிபாட்டு தலங்களுக்கு செல்ல பக்தர்களுக்கு விதிக்கப்பட்ட தடை நீட்டிக்கப்பட்டு உள்ளது. இதனால் ராமேஸ்வரம் ராமநாதசாமி  கோவிலில்  வெள்ளிக்கிழமை முதல் நேற்று ஞாயிற்றுக்கிழமை வரையிலும் 3 நாட்கள் சாமி தரிசனத்துக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. கோவில் தீர்த்த கிணறுகளில்  பக்தர்கள் புனித நீராடவும் தடை விதிக்கப்பட்டு உள்ளது. அங்கு பக்தர்கள் செல்லாதவாறு  போலீசார் கண்காணி திங்கள்கிழமையானப கடந்த மூன்று நாட்களாக பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்யவும், சுற்றுலாதலங்களுக்கு செல்லவும்  தடை விதிகப்பட்டிருந்த நிலையில்.,  இன்று  வெளி மாவட்டம் மட்டுமல்லாமல் வெளி மாநிலத்தில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் அக்னி தீர்த்த கடற்கரையில் புனித நீராடி நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். கொரோனா பரவல் காரணமாக தமிழக அரசின் பல்வேறு நடவடிக்கைகளில் முக்கியமான நடவடிக்கையாக வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய மூன்று நாட்களில் தமிழக கோவில்களுக்கு பக்தர்கள் செல்ல தடை விதிக்கப்பட்டிருப்பதால் கடந்த 3 நாட்களாக இராமேஸ்வரம் இராமநாதசுவாமி கோயிலில்  பக்தர்கள் செல்ல தடை விதிக்கப்பட்டு கோவில் நடை அடைக்கப்பட்டு இருந்தது.,  இந்த நிலையில் திங்கள்கிழமையான இன்று வெளி மாவட்டம் மட்டுமல்லாமல் வெளி மாநிலத்தில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் ராமேஸ்வரத்தில் குவிந்துள்ளனர்.




மேலும்  அக்னி தீர்த்த கடற்கரையில் புனித நீராடல் செய்யும் பக்தர்கள் தம்மோடு வாழ்ந்து மறைந்த முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்ததோடு நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர். அடுத்த வாரம் மஹாளய அமாவாசை வரை இருப்பதால் கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் நோக்கில் அமாவாசை காலங்களில் கடற்கரையில் நீராட தமிழக அரசு தடை விதிக்கும் கூடும் என்பதால் முன்னதாகவே இன்று ஏராளமான பக்தர்கள் தர்பணம் கொடுத்ததோடு சிறப்பு பூஜைகள் செய்து வருகின்றனர். ராமேஸ்வரத்தில்  திடீரென்று குவிந்த பக்தர்களை கண்காணிப்பதற்கும்  கொரோனா வழிமுறைகளை பின்பற்றாமல்  மாவட்ட நிர்வாக அதிகாரிகள் முன்னதாக எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காதது கொரோனா தொற்றுக்கு வழிவகுக்கும் என சமூக ஆர்வலர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.


 'மீண்டும் ஸ்படிக லிங்க பூஜை'


ராமேஸ்வரம் ராமநாதசாமி திருக்கோவிலில் அதிகாலை 5 மணி முதல் 6 மணி வரை ஸ்படிகலிங்க பூஜை நடைபெறும், இந்த பூஜையை காண பக்தர்கள் ஒவ்வொருவருக்கும் 50 ரூபாய் கட்டணம் வசூல் செய்யப்படும். கொரானா நோய்த்தொற்று காரணமாக கடந்த ஆண்டு (2020) மார்ச் மாதம் ஸ்படிகலிங்க பூஜை காண பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், தற்பொழுது நோய் தொற்று குறைந்து வரும் நிலையில் 19 மாதங்களுக்கு பின் இன்று முதல் மீண்டும் ஸ்படிகலிங்க பூஜை கண்டு சுவாமி தரிசனம் செய்வதற்கு பக்தர்களுக்கு கோவில் நிர்வாகம் அனுமதி வழங்கியுள்ளது. இதனால் வட மாநிலங்களிலிருந்து வந்திருந்த அதிகமான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று ஸ்படிகலிங்க தரிசனத்தை கண்டு களித்தனர். அதன்பின் ராமநாத சுவாமிக்கு 6 மணிக்குப் பின் நடைபெறும் இலவச தரிசனத்தில் பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.




வாரத்தில் இறுதி நாட்களான  மூன்று தினங்களுக்கு  கோவிலுக்குள் பக்தர்கள் நேரடியாக சென்று தரிசனம் செய்ய தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில், இன்று தரிசனத்துக்கு அனுமதி வழங்கப்பட்டதால் அதிக அளவில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வட மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய குவிந்தனர். ஸ்படிகலிங்க தரிசனத்துக்கு அனுமதி அளித்தது போல் கோவிலுக்குள் உள்ள 22 புனித தீர்த்தங்களில் பக்தர்கள் நீராட அனுமதி அளிக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.