மதுரை மாட்டுத்தாவணி செய்தியாளர்கள் அரங்கில் எடப்பாடு மாநாடு தொடர்பாக தேவரின கூட்டமைப்பினர் செய்தியாளர்களை சந்தித்து பேசினர். அப்போது  தென்னாட்டு மக்கள் கட்சியின் தலைவர் கணேச தேவர் பேசும்போது ”ஆகஸ்ட் 20 துரோகி எடப்பாடி அணியினரால் நடத்தப்படும் மாநாட்டிற்கு தமிழக அரசு தடை செய்ய வேண்டும், மாநாட்டை கண்டித்து மதுரை முனிச்சாலை பகுதியில் வரும் 20ஆம் தேதி கண்டன ஆர்ப்பாட்டமும், கருப்புகொடி ஏந்தியும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடவுள்ளோம்.


இ.பி.எஸ்.க்கு கண்டனம்:


எடப்பாடி பழனிச்சாமி 68 சமூகத்தை ஏமாற்றி 10.5 % இட ஒதுக்கீட்டில் அவரது வெற்றிக்காக இரு தரப்பினரையும் ஏமாற்றி துரோகம் செய்துவிட்டார், அதிமுகவிற்கு உறுதுணையாக இருந்த தேவரினத்தை ஏமாற்றும் எடப்பாடி பழனிச்சாமியின் செயலை வன்மையாக கண்டிக்கிறோம். அமைதி பூங்காவாக உள்ள தென்தமிழகத்தில் எடப்பாடி மாநாட்டால் சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் என்பதால் தமிழக அரசு மாநாட்டை தடை செய்ய வேண்டும்.


பதவி வெறிக்காக அரசியல் அதிகாரத்தில் இருந்து முக்குலத்தோர் சமுதாயத்தை வெளியேற்றிவிட்டார், பணம் கொடுத்து அனைத்தையும் சாதித்துவிடலாம் என நினைக்கிறார், முக்குலத்தோருக்கு செய்த துரோகத்தை நாங்கள் மறப்போம் எடப்பாடி கனவிலும் கூட நினைக்ககூடாது. தென் மாவட்டத்திற்கு அடிப்படை வசதிகள் செய்துகொடுக்காமல் புறக்கணித்துவிட்டு அவர் சார்ந்த பகுதிகளுக்கு மட்டும் பல்வேறு திட்டங்களை செயல்படுத்திய சுயநலவாதி எடப்பாடி பழனிச்சாமி.




எடப்பாடியை நுழைய விட மாட்டோம்:


தொடர்ந்து பேசிய PMT மக்கள் பாதுகாப்பு இயக்க தலைவர் இசக்கிராஜா பேசியபோது..,” தென்மாவட்டங்களில் எடப்பாடியை நுழைய விடமாட்டோம், எடப்பாடி பழனிச்சாமியை தென் மாவட்டங்களில வெற்றிபெற விடமாட்டோம், இந்த மாநாட்டிற்கு முக்குலத்தோரை சேர்ந்த பெரும்பாலனோர் வருகை தரமாட்டார்கள், எடப்பாடி மாநாட்டிற்கு தமிழக அரசு தடை விதிக்க வேண்டும், எடப்பாடிக்கு துணை போகும் அவருடன் உள்ள செல்லூர் ராஜூ ,உதயகுமார், காமராஜ், ராஜன் செல்லப்பா உள்ளிட்ட முக்குலத்தோர் சமுதாய நபர்களை ஒட்டுமொத்த முக்குலத்தோர் சமூகத்தினரும் எதிர்ப்போம். தேசியமும், தெய்வீகத்தையும் பின்பற்றும் தேவர் இன மக்கள் இந்த மாநாட்டிற்கு வரக்கூடாது.


இந்த மாநாட்டிற்கு வந்தால் தேவர் இனத்தை அழிக்கும் சூழல் உருவாகும், தேவர் மீது ஆணையிட்டு சொல்கிறோம் அவர்கள் கொடுத்த பணத்தை வாங்கி கொண்டு மாநாட்டிற்கு வர வேண்டாம், தேவர் ஜெயந்தி விழாவில் தங்க கவசத்தை அணிவிக்க தடையாக இருந்தவர் எடப்பாடி பழனிச்சாமி எனவும், ஒபிஎஸ் எந்த சமூகத்திற்கும் எதிரானவராக இருக்கவில்லை, ஆனால் எடப்பாடி முக்குலத்தோர் சமுதாயத்தை முடக்கும் எதிரியாக உள்ளார். உண்மையான ஆண்மை மிக்க தலைவராக இருந்தால் ஏன் பசும்பொன் முத்துராமலிங்க தேவருக்கும், மருதுபாண்டியர்களுக்கும், பூலித்தேவனுக்கும் ஏன் மரியாதை செலுத்த வரவில்லை,?




இதனை தொடர்ந்து முக்குலத்தோர் தேசிய கழக தலைவர் SP ராஜா பேசியபோது..,”பணத்தை கொடுத்தும் மதுவை கொடுத்தும் தேவர் சமூகத்தினரை வர வைக்க முயற்சி செய்கின்றனர். மாநாட்டை தடை செய்ய கோரி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரிடம் மனு அளிக்கவுள்ளோம், தென்மாவட்டங்களில் தேவர் சமூக மக்களை எடப்பாடி காசு கொடுத்து வாங்கிவிடலாம் என்ற எண்ணத்திற்கு பாடம் புகட்ட வேண்டும் என்பதற்காக ஆர்ப்பாட்டம் செய்யவுள்ளோம்., எடப்பாடி ஆட்சியில் தென்மாவட்டம் முழுமையாக புறக்கணிக்கப்பட்டது எந்த தேவர் இனத்தவர்களும் கோட்ருக்கும் பிரியாணிக்கும் அடிமையா இருக்கமாட்டான், எங்கள் சமுதாயத்திற்கான எதிரி எடப்பாடி அவர் சார்ந்த சமூகத்தை எந்த வகையிலும் நாங்கள் பேசவில்லை என்றார்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்











ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண