சிவகங்கை மேலவாணியங்குடியில் தனியார் பள்ளியானது இயங்கிவருகிறது. நேற்று மாலை வழக்கம்போல் பள்ளி முடிந்து அதே பள்ளிக்கு சொந்தமான வாகனத்தில் பெருமாள்பட்டி, ஈசனி, சோழபுரம், ஒக்கூர் ஆகிய கிராமங்களை சேர்ந்த 20க்கும் மேற்பட்ட குழந்தைகளை ஏற்றிக்கொண்டு பெருமாள்பட்டி சுற்றுவட்டார சாலை அருகே செல்லும்போது திருப்பத்தூர் பகுதியில் இருந்து இளையான்குடி நோக்கி சென்ற கேஸ் சிலிண்டர் ஏற்றி வந்த லாரி மீது மோதியது.






இதில் 10 குழந்தைகள் காயமடைந்ததுடன் 1 குழந்தை படுகாயமடைந்து சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து செல்லப்பட்டு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. வாகனம் விபத்துக்குள்ளானது குறித்து அறிந்து அங்குவந்த பெற்றோர்கள் குழந்தைகளை கண்டு கண்ணீர் வடித்தனர். மேலும் விபத்துக்குள்ளான பள்ளி வாகனமானது இன்சுரன்ஸ், எஃப்.சி, புகை பரிசோதனை அனைத்தும் காலாவதியாகியுள்ளதாக என சொல்லப்படுகிறது. இந்நிலையில் பள்ளி நிர்வாகம் அந்த வாகனத்தை இயக்கிவருவது பெற்றோர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.



 


 

இதே பள்ளியில் தொடர்ந்து வாகனம் விபத்து ஏற்படுவதுடன் கடந்த 1 மாதத்திற்கு முன்னர் 5 ஆம் வகுப்பு மாணவன் உயிரிழந்ததும் அந்த பள்ளி நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுக்க கோரியும் பெற்றோர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

இது தொடர்பாக விசாரிக்க சிவகங்கை ஆர்.டி.ஓ., மூக்கனிடம் தொடர்பு கொண்டு பேசினோம்..,” விபத்து ஏற்பட்ட பள்ளி வாகனம் குறித்து ஆய்வு செய்ததில் ஆவணங்கள் அனைத்தும் சரியாக உள்ளது. விபத்து குறித்து வழக்கு பதிவு செய்தபின் கூடுதல் விசாரணை நடத்தப்படும். சிவகங்கையில் தொடர்ந்து பள்ளி வாகங்கள் ஆய்வு செய்யப்படுகிறது. தவறுகள் நடக்காத வண்ணம் செயல்பட்டு வருகிறோம்” என்றார்.






ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண