குடியரசுத்தலைவர் மதுரை மீனாட்சியம்மன் கோவிலுக்கு வருகை தந்து சாமி தரிசனம் செய்தார். பழங்குடியினத்தைச் சேர்ந்த பெண் குடியரசுத் தலைவர் ஒவருக்கு மீனாட்சியம்மன் ஆலயத்தில் பூரண கும்ப மரியாதை அளிக்கப்ப்படுவது இந்திய வரலாற்றிலும், மீனாட்சியம்மன் கோவில் வரலாற்றில் இதுவே முதல்முறை ஆகும்.
மீனாட்சியம்மன் கோயில்:
தமிழ்நாட்டில் 2 நாட்கள் பயணமாக குடியரசுதலைவர் திரௌபதி முர்மு விமானம் மூலமாக டெல்லியில் இருந்து புறப்பட்டார். தனி விமானம் மூலமாக மதுரை விமான நிலையத்திற்கு வருகை தந்த குடியரசு தலைவர் விமானநிலையத்தில் இருந்து காரில் பயணம் செய்து மதுரை மீனாட்சியம்மன் கோவிலுக்கு வருகை தந்து சாமி தரிசனம் செய்தார் .
குடியரசு தலைவர் சாமி தரிசனம் செய்வதற்காக வருகை தந்த போது கோவில் உள்ளே இந்து அறநிலையத்துறை சார்பில் முதன்மை செயலாளர் சந்திரமோகன், ஆணையர் முரளிதரன், கோவில் அறங்காவல் சார்பில் தக்கார் கருமுத்துகண்ணன் ஆகியோர் மீனாட்சியம்மன் சிலையை வழங்கி வரவேற்பு அளித்தனர். இதனை தொடர்ந்து குடியரசு தலைவர் திரௌபதி முர்மு முதலில் அம்மன் சன்னதியில் சுவாமி தரிசனம் செய்தார். அப்போது கோவில் சிவாச்சாரியார்கள் சார்பில் மரியாதை அளிக்கப்பட்டது.
5 அடுக்கு பாதுகாப்பு:
இதனை தொடர்ந்து சுவாமி சன்னதியில் சாமி தரிசனம் செய்தார். இதனை தொடர்ந்து குடியரசு தலைவருக்கு கோவில் சார்பில் குங்குமம் பிரசாதம் வழங்கப்பட்டது. குடியரசு தலைவரின் வருகையை முன்னிட்டு மீனாட்சியம்மன் கோவிலை சுற்றி 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது குடியரசு தலைவர் சாமி தரிசனத்தின் போது மட்டும் பாதுகாப்பு காரணங்களுக்காக சிறிது நேரம் பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை
மீனாட்சியம்மன் கோவில் சாமி தரிசனத்திற்கு பின்னர் அழகர்கோவில் ரோடு பகுதியில் உள்ள அரசு சுற்றுலா மாளிகைக்கு செல்கிறார். மதுரை விமான நிலையம் முதல் மீனாட்சியம்மன் கோவில் மற்றும் அரசு சுற்றுலா மாளிகை வரை 3500காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
கோவை பயணம்:
மீனாட்சியம்மன் கோவில் சாமி தரிசனம் முடித்த பின்னர் அரசு சுற்றுலா மாளிகையில் மதிய உணவு உண்கிறார் பின்னர் மீண்டும் மதுரை விமான நிலையத்திற்கு சென்று விமானம் மூலமாக கோவை செல்கிறார்
முன்னதாக மதுரை விமான நிலையத்திற்கு வருகை தந்த குடியரசு தலைவரை அமைச்சர் மனோதங்கராஜ், வருவாய்த்துறை செயலர் குமார் ஜெயந்த், மாவட்ட ஆட்சியர் அனிஷ்சேகர், மதுரை மேயர் இந்திராணி, மாநகராட்சி ஆணையாளர் சிம்ரன் ஜித் சிங் காலோன் ஆகியோர் வரவேற்றனர்.