மதுரை கரிமேடு காவல்நிலையம் எல்கைக்கு உட்பட்ட  பொன்னகரம் ஒன்றாவது தெரு பகுதியை சேர்ந்த ராஜபாண்டி (24) என்ற இளைஞர் தனியார் கார் நிறுவனம் ஒன்றில் கார் ஓட்டுனராக பணிபுரிந்துவந்துள்ளார். இவருக்கு  திருமணமாகி மனைவி மற்றும் குழந்தையுடன்  வசித்து வந்துள்ளார். இந்நிலையில் ராஜபாண்டியின் மனைவி கர்ப்பமான நிலையில் அவரது தாயார் வீட்டில் தங்கி இருந்ததால் நேற்று மனைவியின் வீட்டிற்கு சென்றுவிட்டு பொன்னகரம் பகுதியில் உள்ள தனது வீட்டிற்கு ராஜபாண்டி திரும்பியுள்ளார்.



 

இந்நிலையில் மதுரா கோட்ஸ் பாலத்தின் கீழே பைக்கில் வந்துகொண்டிருந்தார். அப்போது அந்த பகுதியில் நின்றுகொண்டிருந்த மதுரை கரிமேடு பகுதியை சேர்ந்த மனோஜ்சிவா மனோஜ் (22), மணிகண்டன், லோகேஷ்(20) தத்தனரியை சேர்ந்த கிருஷ்ணகுமார், பெத்தானியாபுரம் பகுதியை சேர்ந்த தங்கபாண்டி , சிம்மக்கலை சேர்ந்த கண்ணன் ஆகிய 6பேர் கொண்ட கும்பல் ராஜபாண்டியை ஆபாசமான வார்த்தையால் திட்டியுள்ளனர். இதனையடுத்து இரு தரப்பினருக்கு வாக்குவாதம் முற்றிய நிலையில் ஓட்டுனர் ராஜபாண்டியை பைக்கில் இருந்து தாக்கி கீழே தள்ளிவிட்டு கட்டையால் தாக்கியுள்ளனர்.



 

இதனையடுத்து உயிர் போகாமல் இருப்பதை தெரிந்து அருகில் இருந்த கல்லை எடுத்து தலையில் போட்டுவிட்டு தப்பியோடியுள்ளனர்.  அப்போது அங்கு அண்ணனை பார்க்க சென்ற ராஜபாண்டியின் தம்பி ஹரிஸ்பாண்டி கீழே கிடந்த ராஜபாண்டியை பார்த்தபோது சம்பவ இடத்திலயே தலை நசுங்கிய நிலையில் பரிதாபமாக உயிரிழந்து கிடந்தார்.  இதனையடுத்து ஹரிஸ்பாண்டி கரிமேடு காவல்நிலையத்திற்கு அளித்த தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் உடலை மீட்டு அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு உடற்கூறாய்விற்காக அனுப்பிவைத்தனர்.



 

இதனையடுத்து கொலை சம்பவத்தில் ஈடுபட்ட கரிமேடு பகுதியை சேர்ந்த மனோஜ்சிவா மனோஜ் (22), மணிகண்டன், லோகேஷ்(20) தத்தனரியை சேர்ந்த கிருஷ்ணகுமார், பெத்தானியாபுரம் பகுதியை சேர்ந்த தங்கபாண்டி , சிம்மக்கலை சேர்ந்த கண்ணன் ஆகிய 6பேர் கொண்ட கும்பல் தலைமறைவாகியுள்ள நிலையில் அவர்களை கரிமேடு காவல்துறையினர் தேடிவருகின்றனர்.