தேனியில் நடிகர் விஜய் அரசியலுக்கு வர வேண்டுமென தேனி மாவட்ட விஜய் ரசிகர் மன்றத்தினரால் போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது. மாணவர்கள் நினைத்தால் மாற்றம் வரும் நீங்கள் முடிவெடுத்தால் 26 தேர்தல் ஏழைகளுக்கு ஏற்றம் வரும் என்ற வாசங்களுடன் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது. நடிகர் விஜய் அரசியலுக்கு அழைத்து வர வேண்டும் என விஜய் ரசிகர் மன்றத்தினர் மற்றும் அவரது ரசிகர்களின் விருப்பமாக இருந்து வருகிறது. இதை நடிகர் விஜய்க்கு தெரிவிக்கும் விதமாக தமிழகத்தில் பல பகுதிகளில் விஜயை அரசியலுக்கு வர வேண்டும் என விஜய் ரசிகர் மன்றத்தினர் சார்பாக போஸ்டர்கள் ஒட்டும் சம்பவம் அடிக்கடி நடைபெற்று வருகிறது.


Tasmac Closed: நாளை எந்தெந்த மாவட்டங்களில் எத்தனை டாஸ்மாக் கடைகள் மூடல்? முழு விவரம் உள்ளே..!




சில நாட்களுக்கு முன்பு 10 மற்றும் 12 ஆம் பொதுத்தேர்வில் சட்டமன்ற தொகுதிகளிள் முதல் மூன்று இடங்களை பெற்ற மாணவர்களுக்கு நடிகர் விஜய் 12 மணி நேரத்திற்கு மேலாக பரிசுகளை வழங்கினார். விஜய் அரசியலுக்கு வர உள்ளதால் இது போன்ற நிகழ்ச்சிகள் நடத்தப்படுவதாக அரசியல் விமர்சகர்கள் சார்பில் கருத்துக்கள் முன்வைக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சி விவாத பொருளாக மாறியது. இந்நிலையில் விஜய் பிறந்தநாளை முன்னிட்டு அவருக்கு வாழ்த்து தெரிவிக்கும் விதமாக தேனி மாவட்டத்தில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருந்தது.


MK Stalin Letter: மதநல்லிணக்கக் கொள்கையை வலியுறுத்திய கலைஞர் பிரதிநிதியாக பங்கேற்கிறேன்: பீகார் செல்லும் முதல்வர் ஸ்டாலின்




S.P. Velumani: 'அதிமுக முன்னாள் அமைச்சர்களை புதிய வழக்குகளில் கைது செய்ய திட்டம்’ - எஸ்.பி.வேலுமணி


தேனி மாவட்டத்தில் தேனி நகரில் முக்கிய பகுதியில் விஜய் ரசிகர் மன்ற இளைஞர் அணி மாவட்டத் தலைவர் பிரகாஷ் சார்பில் ஒட்டப்பட்டிருந்த இந்த போஸ்டர்களில் நடிகர் விஜய் அரசியலுக்கு வர வேண்டும் என குறிப்பிட்டு இருந்தது. மாணவர்கள் நினைத்தால் மாற்றம் வரும் நீங்கள் முடிவெடுத்தால் 2026இல் 234 தொகுதிகளிலும் ஏழைகளுக்கு ஏற்றம் வரும் என்றும், எங்கள் ஓட்டுக்கு value வேண்டும் அதுக்கு எங்கள் தலைவர் விஜய் களத்தில் நிற்க வேண்டும் என்ற வாசகங்கள் அடங்கிய போஸ்டர்கள் இடம் பெற்றிருந்தது. இதனால் விஜய்யின் அரசியல் வருவதற்கான முயற்சி மேலும் தீவிரம் அடைந்து இருப்பதாக தெரிய வருகிறது. அதன் வெளிப்பாடு தற்போது போஸ்டர்கள் மூலம் வெளிப்பட்டு இருப்பதாக தெரிய வருகிறது.


ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/abpnaduofficial என்ற இணைப்பை க்ளிக் செய்யவும். 



 




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண