மதுரை அவனியாபுரம் பகுதியில் பாண்டியர் காலத்தில் 16-ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட கல்யாண சுந்தரேஸ்வரர் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்தக் கோவிலுக்கு தினமும் வெங்கடேசன் என்ற பக்தர் ஒருவர் முகவரி குறிப்பிடாமல் கடிதம் எழுதி வருகிறார்.  இன்று பக்தர் வெங்கடேசன் எழுதியுள்ள அந்தக் கடிதத்தின் முன்பகுதியில் "தினம் எனக்கு போதுமான வருமானம் தாருங்கள்." என்று எழுதப்பட்டிருந்தது., அதுமட்டுமல்லாமல் கடிதத்தில் "அம்மை அப்பா சரணம் மதுரை நாடார் பெண் அனுஷாவை உடனே என் உடன் தினம் தினம் பலமுறை பேச வையுங்கள் - வெங்கடேசன்" என்று அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது. இதை பார்த்த கோவில் நிர்வாகத்தினர் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. முகம் தெரியாமல் வெங்கடேசன் என்ற பெயரில் தினமும் கடிதம் எழுதி அனுப்பி வைத்த அந்த நபர் யார்.? எந்த பகுதியை சேர்ந்தவர்.? என்ற விவரம் தெரியாமல் கோவில் நிர்வாகத்தினர் குழப்பத்தில் உள்ளனர். கடவுளுக்கு எழுதப்பட்ட கடிதத்தில் தனது காதலியை தினம்தினம் தன்னுடன் பேச வையுங்கள் என்று எழுதப்பட்டிருப்பது பார்ப்போரை அதிர்ச்சியடைய வைத்தது.



இந்நிலையில் அதேபோல் மதுரையில் ஒட்டப்பட்ட போஸ்டர் ஒன்று சர்ச்சையை கிளப்பியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டையில் நடைபெற்ற ஊரக உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய தி.மு.க பொதுச் செயலாளரும் நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுருகன், எம்.ஜி.ஆர் நம்பிக்கை துரோகி என்று குறிப்பிட்டிருந்தார். எம்.ஜி.ஆரை நம்பிக்கை துரோகி என கூறியுள்ளதற்கு அ.தி.மு.க கண்டனம் தெரிவித்தது. இது  தொடர்பாக தங்களது எதிர்ப்பை தெரிவிக்க அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கூட்டாக வெளியிட்டினர் என்பது குறிப்பிடதக்கது.



இந்நிலையில் அமைச்சர் துரை முருகனின் பேச்சை எதிர்க்கும் வகையில் மதுரை அ.தி.மு.க நிர்வாகிகள் சிலர் சார்பாக மதுரை மாநகர் முழுவதும் போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளன. அந்த போஸ்டரில் துப்பாக்கி குண்டை தொண்டையில் தாங்கி இரத்தம் சிந்தி திமுகவை அரியணையில் அமர்த்தியவர்  எம்.ஜி.ஆர். அறிஞர் அண்ணாவின் மறைவிற்கு பின் கருணாநிதியை முதல்வராக்கியவர், கடனில் இருந்த கருணாநிதி குடும்பத்திற்கு சம்பளம் வாங்காமல் எங்கள் தங்கம் படத்தில் நடித்து கொடுத்தவர். துரைமுருகனை தன் சொந்த செலவில் எம்.ஏ.பி.எல் படிக்க வைத்தவர், ரத்தக்கொதிப்பால் சட்டமன்ற வளாகத்தில் மயங்கி விழுந்த துரைமுருகனை மடியில் கிடத்தி முதலுதவி செய்து காப்பாற்றியவர் என வாசகங்கள் அடங்கிய போஸ்டர்களை மதுரை மாநகர் மாவட்ட எம்.ஜி.ஆர் மன்றத்தினர் ஒட்டியுள்ளனர். இதனால் மதுரையில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

 

மேலும் செய்திகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் - ராமேஸ்வரம்: பாம்பன் இந்திரா காந்தி சாலை பாலத்துக்கு இன்றுடன் வயது 34...!