Pongal 2025: சிறுமலை வன கிராமத்தில் விவசாயிகளால் சிறப்பாக கொண்டாடப்பட்ட குதிரை பொங்கல்

விவசாயத்திற்கு உறுதுணையாக இருக்கக்கூடிய குதிரையை தெய்வமாக வழிபட்டு குதிரை பொங்கலை பொதுமக்கள் கொண்டாடி மகிழ்ந்தனர். 

Continues below advertisement

திண்டுக்கல்லை அடுத்துள்ள சிறுமலை வன கிராமங்களில் விவசாயத்திற்கு உறுதுணையாக இருக்கக் கூடிய  குதிரைகளுக்கு பொங்கல் வைத்து கொண்டாடி மகிழ்ந்த விவசாயிகள்  

Continues below advertisement

தமிழ்நாட்டில் நான்கு நாள் பொங்கல் பண்டிகையின் ஒருங்கிணைந்த பகுதியாகக் கருதப்படும் மாட்டுப் பொங்கல் மிகுந்த மகிழ்ச்சியுடனும், பயபக்தியுடனும் கொண்டாடப்படுகிறது. கால்நடைகள் மற்றும் இயற்கையை மதிக்க அர்ப்பணிக்கப்பட்ட நாள் இந்த சிறப்பு நாள். மனிதர்கள், விலங்குகள் மற்றும் சுற்றுச்சூழலுக்கு இடையிலான இணக்கமான உறவை வலியுறுத்துகிறது. சூரியப் பொங்கலுக்கு அடுத்த நாள், மாட்டுப் பொங்கல் 2025 ஜனவரி 15 அன்று கொண்டாடப்பட்டது. இது விவசாயத்திற்கு உதவும் கால்நடைகளுக்கு நன்றி தெரிவிக்கும் நேரத்தைக் குறிக்கிறது. 


திண்டுக்கல் அருகே உள்ள வனப்பகுதியில் அமைந்துள்ளது சிறுமலை கிராமம். இங்கு பழையூர், புதூர், வேளாம்பண்ணை, தாளக்கடை, கடமான்குளம், அகஸ்தியர்புரம், தென்மலை,  உட்பட 20க்கும் மேற்பட்ட மலை கிராமங்கள் மற்றும் குக்கிராமங்கள் உள்ளது. இந்த மலை கிராமங்களில் உள்ள வனபகுதியில் சாலை வசதி கிடையாது. இங்கு உள்ள விளை நிலங்களில் வாழை, எலுமிச்சை, சவ்சவ், அவரை, காப்பி, ஏலக்காய், பலாப்பழம் போன்றவற்றை பயிர் செய்யப்படுகிறது. மலைப்பகுதியில் விளையக் கூடிய காய்கறி மற்றும் பழங்களை ஊருக்கு எடுத்து கொண்டு வர வேண்டும் என்றால் குதிரையின் முதுகில் மூட்டையாக கட்டி தான் எடுத்து வர வேண்டும்.  

Saif Ali Khan Injured: கொடூரம்! பாலிவுட் நடிகர் சைஃப் அலிகானுக்கு கத்திக்குத்து - வீட்டின் உள்ளே புகுந்து அட்டாக்


இதனால் ஒவ்வொரு வீட்டிலும் குறைந்தது இரண்டு குதிரையாவது வைத்திருப்பார்கள். சிறுமலை பகுதியில் ஏறத்தாழ 2000 குதிரைகள் உள்ளன.  இதனையடுத்து கிராமங்களிலிருந்து சரக்கு வேன் மற்றும்  பேருந்து மூலமாக திண்டுக்கல்லிற்கு கொண்டு வந்து காய்கறி மற்றும் பழங்களை விற்பனை செய்யப்படுகிறது. தமிழர்களின் திருநாளான பொங்கல் பண்டிகை தமிழகம் முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட்டது.  பொங்கலுக்கு அடுத்த நாளான   நேற்று 15.01.24 மாட்டுப் பொங்கல் தமிழகம் முழுவதும் கிராமங்களில் உள்ள மாடுகளை அலங்கரித்து பொங்கல் வைத்து வழிபாடு செய்து கொண்டாடப்பட்டு வருகிறது. அதேபோல் சிறுமலையில் மலைப்பகுதியில் உள்ள விவசாயிகள் குதிரை பொங்கல் கொண்டாடுவது வழக்கம்.

ரூ. 100 கோடி சொத்துக்கு ஆப்பு.. வைத்திலிங்கத்திற்கு ED போட்ட ஸ்கெட்ச்.. கலக்கத்தில் ஓபிஎஸ்!

 

தங்களுக்கு விவசாயத்திற்கு உறுதுணையாக இருக்கக்கூடிய குதிரைகளை தெய்வமாக கருதி அதனை குளிப்பாட்டி அதற்கு கலர் பொடிகளை கொண்டு உடல் முழுவதும் பொட்டு வைத்து அலங்காரம் செய்து மாலை அணிவித்து சலங்கை கட்டி பொங்கல் வைத்து படைத்து வழிபாடு செய்து குதிரைக்கு ஊட்டி விடுவார்கள். பின்னர் அனைத்து குதிரைகளையும் ஒன்று சேர்த்து ஊர் முழுவதும் ஊர்வலமாக அழைத்துச் செல்வர். அதனைத் தொடர்ந்து இன்றைய தினம் குதிரைக்கு முழு ஓய்வு அளித்து அதனை சுதந்திரமாக மேய்ச்சலுக்கு விட்டு விடுவார்கள் எந்த வேலையும் கொடுக்க மாட்டார்கள். தங்களது விவசாயத்திற்கு உறுதுணையாக இருக்கக்கூடிய குதிரையை தெய்வமாக வழிபட்டு குதிரை பொங்கலை பொதுமக்கள் கொண்டாடி மகிழ்ந்தனர். கடந்த 30 வருடங்களுக்கு மேலாக குதிரை பொங்கல் கொண்டாடப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Continues below advertisement
Sponsored Links by Taboola