அதிமுகவின் மூத்த தலைவர்களில் ஒருவரும் முன்னாள் அமைச்சருமான வைத்திலிங்கத்திற்கு சொந்தமான 100 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்தை அமலாக்கததுறை முடக்கியுள்ளது. வைத்திலிங்கத்திற்குச் சொந்தமான 2 அசையா சொத்துகளை முடக்கியதாக எக்ஸ் தளத்தில் அமலாக்கத்துறை பதிவிட்டுள்ளது. வீட்டு வசதித்துறை அமைச்சராக பதவி வகித்தபோது சொத்து சேர்த்ததாக தொடரப்பட்ட வழக்கில் அமலாக்கத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.


ED ஸ்கெட்ச்சில் சிக்கிய அதிமுக முன்னாள் அமைச்சர்:





கடந்த 2011ஆம் ஆண்டு முதல் 2016ஆம் ஆண்டு வரையிலான அதிமுக ஆட்சி காலத்தில் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சராக பதவி வகித்தவர் வைத்திலிங்கம். தற்போது, ஓபிஎஸ் ஆதரவாளராக இருந்து வருகிறார்.








தனியார் கட்டுமான நிறுவனம் ஒன்றுக்கு அபார்ட்மெண்ட் மற்றும் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் கட்டி தருவதற்கு திட்ட அனுமதி வழங்க வைத்திலிங்கம், அமைச்சராக இருந்தபோது, 28 கோடி ரூபாய் லஞ்சம் பெற்றதாக புகார் கூறப்படுகிறது.


கலக்கத்தில் ஓபிஎஸ்:


லஞ்சமாக பெற்ற பணத்தை தனியார் கட்டுமான நிறுவனத்திடம் இருந்து கடனாக பெற்றது போல அவர் கணக்கு காட்டியதாக குற்றம் சாட்டப்படுகிறது. இதுதொடர்பாக லஞ்ச ஒழிப்பு காவல்துறை மற்றும் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.




இந்த வழக்கு தொடர்பாக வைத்திலிங்கத்திற்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் கடந்தாண்டு அக்டோபர் மாதம் சோதனை நடத்தி, பல்வேறு முக்கிய ஆவணங்களை கைப்பற்றினர். இந்த நிலையில், பண மோசடி தடுப்பு சட்டத்தின் கீழ், வைத்திலிங்கத்திற்கு சொந்தமான கிட்டத்தட்ட 100 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்தை அமலாக்கததுறை முடக்கியுள்ளது. 2 அசையா சொத்துகளை முடக்கியதாக எக்ஸ் தளத்தில் அமலாக்கத்துறை பதிவிட்டுள்ளது.


இதையும் படிக்க: BNS different from IPC: புதிய குற்றவியல் சட்டம் Vs இந்திய தண்டனை சட்டம் - அறிய வேண்டிய முக்கிய விதிகள்