பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 59ஆவது குருபூஜை 104 ஆவது ஜெயந்தி விழாவையொட்டி ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே  பசும்பொன்னில் தேவர் குருபூஜை நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிலையில் தமிழக முதல்வர் மு.கஸ்டாலின் உட்பட பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் பசும்பொன் தேவர் அவர்களின் உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.




இந்த குருபூஜை தென் மாவட்டங்கள் உள்பட பல்வேறு மாவட்டங்களில் நடைபெற்றது. குருபூஜை நிகழ்ச்சிக்கு பல்வேறு மாவட்டங்களை சேர்ந்தவர்கள் சென்றனர். நிகழ்வுக்கு செல்லும் வழியில் அதிவேகமாக வாகனம் ஓட்டியது, அதிக ஒளியுடன் அதிக ஆட்களை ஏற்றிச்சென்றது , போலிசாரின் வாகனத்தின் மேல் நின்று ஆட்டம் போட்டது என பல்வேறு நிகழ்வுகள் நடந்த நிலையில்




மதுரை மாநகரில் நடைபெற்ற தேவர் ஜெயந்தி விழா கொண்டாட்டங்களின் போது இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனங்களை அதி வேகமாகவும் அதிக ஒலி எழுப்பி ஓட்டி பொதுமக்களின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்படுத்திய 112 இருசக்கர வாகனங்கள் மற்றும் 13 நான்கு சக்கர வாகனங்கள் மீது 13 இந்திய தண்டனை சட்ட வழக்குகள், நான்கு  MCP ACT வழக்குகள் மற்றும் 62 மோட்டார் வாகன சட்ட வழக்குகள் உட்பட மொத்தம் 79 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.


அதில் 23 நபர்கள் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். மேலும் சட்ட விதிமீறல் குற்றங்களுக்கு 136600/- ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டு உள்ளதாகவும், இது தவிர்த்து இரு சக்கர வாகனங்களை அதிவேகமாக ஓட்டி பொதுமக்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்திய 14 வாகனங்கள் மதுரை மாநகர போக்குவரத்து காவல்துறையினரால் 38 மோட்டார் வாகன வழக்குகள் பதிவு செய்யப்பட்டு ரூபாய் 16400/- அபராதத் தொகை விதிக்கப்பட்டுள்ளது.




மேலும் மதுரை மாநகர போக்குவரத்து காவல்துறையினரால் மோட்டார் வாகன விதிகளை மீறிய 150 இருசக்கர வாகனங்களில் புகைப்படங்கள் எடுக்கப்பட்டு வாகனங்களை ஓட்டி வந்தவர்கள் மீது அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. தேவர் ஜெயந்தி விழா கொண்டாட்டத்தின்போது அரசு வாகனங்களை சேதப்படுத்தியதாக குற்றவழக்கு பதிவு செய்யப்பட்டு அதில் சம்பந்தப்பட்டவர்களை ட்ரோன் கேமரா பதிவுகள் மூலம் காவல் துறையினரால் எடுக்கப்பட்ட மற்றும் சிசிடிவி கண்காணிப்பு கேமராக்களின் பதிவுகள் மூலம் அடையாளம் காணப்பட்டு கைது செய்ய தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக மதுரை நகர காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். அதே போல் தேவர் குருபூஜை விழாவில் ரகளை செய்த ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த 100 பேர் மீது வழக்குப் பதியப்பட்டும் 41 இரண்டு சக்கர வாகனங்கள் பறிமுதலும் செய்யப்பட்டுள்ளது.




கமுதி அபிராமம் பகுதியில் இளைஞர்கள் சிலர் போலீசார் வருவாய்த்துறை அதிகாரிகள் வாகனங்களில் ஆட்டம் போட்டுள்ளனர். அவர்களைக் கட்டுப்படுத்தும் முயற்சியில் போலீசார் ஈடுபடவில்லை இதில் உச்சகட்டமாக கோவை மாவட்டத்தில் இருந்து வந்து பாதுகாப்பு பணிக்கு வந்திருந்த போலீஸ் அதிகாரியின் ஜீப்பில் ஏறி இளைஞர்கள் ஆட்டம் போட்டது குறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில் ரகளையில் ஈடுபட்ட 300 இரண்டு சக்கர வாகனத்தில் சென்றவர்களின் குறித்து விசாரித்து 40 இரண்டு சக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன என்ற அடிப்படையில் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளதாகவும் தெரிவித்தார்.


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


 


பேஸ்புக் பக்கத்தில் தொடர


 


ட்விட்டர் பக்கத்தில் தொடர


 


யூடியூப்பில் வீடியோக்களை காண