மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள உள்ள புல்லமத்தூரை சேர்ந்த 17 வயது சஞ்சய் திருமங்கலம் தனியார் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்து வந்தார். கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக மதுரை அவனியாபுரத்தில் உள்ள அவரது மாமா வீட்டில் தங்கி படித்து வந்தார். இன்று அதிகாலை தேர்வுக்காக படித்துக் கொண்டிருந்த போது தேர்வில் தோல்வி அடைந்து விடுவோமோ என்ற பயத்தில் தீக்குளித்து தற்கொலை முயற்சி செய்துள்ளார்.






அப்போது அருகில் இருந்த அவரது மாமா காவல்துறையில் பணியாற்றி வரும் சார்பு ஆய்வாளர் ராஜபாண்டி என்பவர் காப்பாற்ற சென்ற போது அவர் மீது தீ பட்டு படுகாயம் அடைந்தார். இதனைத் தொடர்ந்து இருவரையும் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.



இதுகுறித்து அவனியாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். இதைதொடர்ந்து அரசு மருத்துவமனையில் இருந்து தீவிர சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்று சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் இன்று மாலை பிளஸ் டூ மாணவன் சஞ்சய் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் மதுரை மாவட்டத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.



மன உளைச்சலோ, தற்கொலை எண்ணமோ மேலிடும்போது உரிய ஆலோசனை பெற்றால் புதிய வாழ்க்கை அவர்களுக்காக காத்துக்கொண்டிருக்கிறது. அதற்காகவே சினேகா போன்ற தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் சேவை ஆற்றி வருகின்றன. அவர்களை தொடர்பு கொண்டு இலவசமாக ஆலோசனை பெறலாம்.


சினேகா தன்னார்வ தொண்டு நிறுவனம்,


எண்; 11, பார்க் வியூவ் சாலை, ஆர்.ஏ. புரம்,


சென்னை - 600 028.


தொலைபேசி எண் - (+91 44 2464 0050, +91 44 2464 0060)