கொடைக்கானல் மலை பகுதிகளில் பிளம்ஸ் பழங்களின் சீசன் துவக்கம், கொரோனா ஊரடங்கு எதிரொலி விலையும் இல்லை,விளைச்சலும் இல்லை விவசாயிகள் கவலை.




மலைகளின் இளவரசி சுற்றுலா தலமாகவும் பார்ப்பவர்களை கொள்ளை கொள்ளும் அழகும் என பல்வேறு சுற்றுலா பயணிகளை கவரும்  மலை பிரதேசங்களில் ஊட்டிக்கு அடுத்தபடியாக கொடைக்கானலில் உள்ள பல்வேறு கிராமபுற பகுதிகளான ,வில்பட்டி,பள்ளங்கி,கோம்பை,அட்டுவம்பட்டி  உள்ளிட்ட   மலை கிராமங்களில் அதிகப்படியாக பிளம்ஸ் பழங்கள் பல ஏக்கர் பரப்பளவில்  விவசாயம் செய்யப்பட்டு வருகிறது.  பிளம்ஸ் பழங்கள் ஒவ்வொரு வருடமும் ஏப்ரல்,மே ,ஜூன் ஆகிய மூன்று மாதங்களில் மட்டும் சீசன் தொடங்கிருக்கும் நிலையில் பிளம்ஸ் பழங்கள் நல்ல விளைச்சலும் அடைந்திருக்கும். தற்போது கொடைக்கானல் மலை பகுதியில் பிளம்ஸ் பழங்கள் விளைச்சல் துவங்கி  அறுவடை பணியில் கடந்த ஒரு மாதமாக மலைகிராம  விவசாயிகள் ஈடுபட்டுவருகின்றனர்.


  பிளம்ஸ் பழங்கள் அதிகப்படியாக வருடந்தோறும்  வெளி மாநிலங்களான கேரளா, கர்நாடகா, ஆந்திரா  உள்ளிட்ட  பல்வேறு மாநிலங்களுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டும் கொடைக்கானல் பகுதியில் உள்ள சில கிராமங்களில் உள்ள மலைகிராம  விவசாயிகள் இந்த சீசனில் மாடுமே அதிகமாக லாபம் ஈட்டும் பணியில்  ஆர்வம் காட்டுவர் தற்போது உள்ள சூழலில்  தமிழகம்  முழுவதும் கொரோனா தொற்று காரணமாக  பொது முடக்கம் அமுல்படுத்தி உள்ள நிலையில் கொடைக்கானல் பகுதியில் இருந்து மற்ற மாநிலங்களுக்கு ஏற்றுமதி செய்யும் பிளம்ஸ் பழங்களை  கொரோனா வைரஸ் பரவும் அச்சத்தால் மற்ற மாநிலங்களுக்கு ஏற்றுமதி செய்யமுடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. பெரும்பாலும் இதே மாதங்களில் அதிகமாக கிலோவிற்கு 100 ருபாய் முதல் 150 ருபாய் வரையில் விற்பனையாகும் பழங்கள் தற்போது விலை குறைந்து கிலோ ஒன்றிற்கு  30 ரூபாய் முதல் 40 ரூபாய் வரை மிக குறைந்த விலைக்கு விற்பனையாவதாகவும் இங்கிருந்து ஏற்றுமதியாகும் பிளம்ஸ் பழங்கள் கொடைரோடு,பழனி,வத்தலகுண்டு,மதுரை, திண்டுக்கல் உள்ளிட்ட சந்தைகளுக்கு விற்பனைக்காக அனுப்பி வைக்கின்றனர்.




மேலும் பிளம்ஸ் விளைச்சல் துவக்கத்தில்  அதிகப்படியாக மழை பெய்ததால் விளைச்சல் குறைவாக காணப்படுகிறது. இந்த விவசாயத்தில் பழங்கள் பறிக்கும் ஆட்களுக்கு எடுப்பு கூலி கூட கொடுக்க முடியாத  நிலை ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர். பிளம்ஸ் பழ சீசனில் விவசாயிகள் பல லட்சம் மதிப்பில் இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் இவர்களுக்கு தோட்டக்கலை துறையினர்  விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என மலைகிராம விவசாயிகள் கோரிக்கையும் விடுக்கின்றனர்.  விவசாயம் செய்து அதற்கான சீசனை எதிர்பார்த்திருக்கும் வேலையில்  நாடு முழுவதும் கொரோனா வைரஸ் அதிவேகமாக பரவி வரும் சூழலால் பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு யாரையும் விட்டுவைக்கவில்லை என்பது நிதர்சனமான உண்மை.