periyakulam: தேனியில் வாகன சோதனையில் சிக்கிய மெத்தப்பட்டமைன் போதைப்பொருள் - போலீசார் தீவிர விசாரணை

வாகனத்தை முழுமையாக சோதனை செய்த பொழுது  வாகனத்தில் சர்வதேச சட்டவிரோதமான சந்தையில் கிடைக்கும் மெத்தப்பட்டமைன்  என்ற போதைப் பொருள்  30 பாக்கெட்டுகளில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

Continues below advertisement

கஞ்சா பறிமுதல்:

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள ஏ புதுப்பட்டி புறவழிச்சாலை பகுதியில்  பெரியகுளம் வடகரை காவல் ஆய்வாளர் பாஸ்டின் தினகரன் தலைமையில் காவல்துறையினர்  நள்ளிரவில் வழக்கமான ரோந்து பணியில் ஈடுபட்டு வாகன சோதனை ஈடுபட்டு வந்தனர். அப்பொழுது கேரள பதிவும் கொண்ட காரை நிறுத்தி வாகன சோதனையில் ஈடுபட்ட பொழுது  அவர்களிடம் முதலில் 250 கிராம் கஞ்சா இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

Continues below advertisement

Fire Accident: சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் வெடி விபத்து - 4 பேர் உயிரிழப்பு, மீட்பு பணிகள் தீவிரம்


மெத்தப்பட்டமைன்: 

இதனை தொடர்ந்து காவல்துறையினர் தொடர் விசாரணையில்  முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்ததால்  வாகனத்தை முழுமையாக சோதனை செய்த பொழுது  வாகனத்தில் சர்வதேச சந்தையில் கிடைக்கும்  மெத்தப்பட்டமைன்  என்ற போதைப் பொருள்  30 பாக்கெட்டுகளில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.


இதனையடுத்து, வாகனத்தில் வந்த மூவரையும் கைது செய்ததோடு வாகனத்தையும் பறிமுதல் செய்து பெரியகுளம் காவல் நிலையத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். இந்த நிலையில் சர்வதேச சந்தையில் கிடைக்கும் போதை பொருளான  மெத்தப்பட்டமைன் என்ற போதைப் பொருள் கைப்பற்றப்பட்டுள்ள தகவலைத் தொடர்ந்து  தேனி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சிவ பிரசாத் பெரியகுளம் காவல் நிலையத்திற்கு வந்து  நேரடி விசாரணை மேற்கொண்டு வருகின்றார்.

மர்மங்கள் நிறைந்த மதிகெட்டான் சோலை! திகில் காட்டின் உள்ளே நடப்பது என்ன?


 மேலும் கைப்பற்றப்பட்ட போதைப் பொருளின் அளவு  மற்றும் அதன் சர்வதேச சந்தை குறித்து மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரிடம் கேட்க முற்பட்டபோது செய்தியாளர்களுக்கு தகவல் தெரிவிக்காமல் சென்ற நிலையில் பெரியகுளம் காவல்துறை துணை கண்காணிப்பாளர்  போதைப் பொருள் கைப்பற்றப்பட்டது உண்மைதான்  ஆனால் இது எங்கிருந்து கொண்டு வரப்பட்டது விற்பனை செய்பவர்கள் யார்  என்ற தொடர் விசாரணையில் இருப்பதால்  கைப்பற்றப்பட்ட போதை பொருளின் அளவு மற்றும் மதிப்பு குறித்து  காவல்துறையினர் தெரிவிக்க மறுத்ததோடு  பிடிபட்ட நபர்களின்  விவரங்களையும் தர மறுத்துள்ளனர்.

Continues below advertisement