பாதாள சாக்கடை மற்றும் சாக்கடை கழிவு நீர் செல்லும் வாய்க்காலில் ஏற்படும் அடைப்புகளை சுத்தம் செய்ய உரிய உபகரணங்களை பயன்படுத்தி பணிகள் செய்ய வேண்டும் என்று தமிழக அரசு அறிவுறுத்தியும், பெரியகுளம் நகராட்சியின் மெத்தன போக்கால் வெறும் கையால் சுத்தம் செய்யும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.


Sanatan Dharma Row: சனாதன தர்ம விவகாரம்... அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்..




தேனி மாவட்டம் பெரியகுளம் நகராட்சி நூற்றாண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்த நகராட்சியாகும். இந்த நகராட்சியில் 50 ஆண்டுகளுக்கு முன்பாகவே பாதாள சாக்கடை திட்டம் கொண்டுவரப்பட்டு செயல்பாட்டில் உள்ளது. இந்நிலையில் பெரியகுளம் நகராட்சி பேருந்து நிலையத்தில் சாக்கடை கழிவு நீர் செல்லும் பாதையில் அடைப்பு ஏற்பட்டு அதிலிருந்து வரும் துர்நாற்றத்தால் பேருந்து நிலையத்தில் உள்ள வணிகர்கள் மற்றும் பேருந்து பயணிகள் பெரும் சிரமம் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து நேற்று பெரியகுளம் நகராட்சியின் பாதாள சாக்கடை மற்றும் கழிவு நீர் செல்லும் வழித்தடங்களை பராமரிக்கும் நகராட்சி பொறியாளரின் கீழ் செயல்படும் ஊழியர்கள் கொண்டு கழிவுநீர் செல்லும் வாய்க்காலில் உள்ள அடைப்புகளை வெறும் கையால் அள்ளி அகற்றும் பணியை மேற்கொண்டுள்ளனர். 


World Cup 2023 Prize Money: அம்மாடியோவ்; உலகக்கோப்பையை வெல்லும் அணிக்கு பரிசுத்தொகை இத்தனை கோடியா?




தற்போது தமிழக அரசு மற்றும் நீதிமன்றங்கள் பாதாள சாக்கடை மற்றும் சாக்கடை கழிவு நீர் வாய்க்கால்களில் வெறும் கையால் குப்பைகளை சுத்தம் செய்யும் பணியை மேற்கொள்ளக்கூடாது என்றும் அதற்குரிய உபகரணங்களை கொண்டு பணி செய்ய வேண்டும் என கடுமையாக எச்சரித்தும்  பெரியகுளம் நகராட்சி நிர்வாகம் பாதாள சாக்கடை கழிவு நீர் அடைப்புகளை சுத்தம் செய்வதற்காக 44 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் புதிதாக ரோபோ இந்திரம் இருந்தும் அதை பயன்படுத்தாமல் பணியாளர்களை வெறும் கையால் சாக்கடை கழிவு நீர் வாய்க்காலில் உள்ள குப்பைகளை சுத்தம் செய்யும் பணி குறித்த வீடியோ பதிவு சமூக வலைதளங்களில் பரவி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


‘பாக்ஸிங்கிற்கு நான் தயார் இடம், நேரத்தை சொல்லுங்கள்’ - சீறிய சீமான்


மேலும் நகராட்சி நிர்வாகம் சார்பாக பெரியகுளம் பகுதியில் கழிவுநீர் சாக்கடை அடைப்பு ஏற்பட்டால் துப்புரவு பணியாளர்களை கொண்டு எந்த ஒரு உபகரங்களும் இன்றி வெறும் கையில் குப்பை மற்றும் சாக்கடை கழிவுகளை அகற்றும் பணியை மேற்கொண்டு வருகின்றனர். தமிழக அரசால் வழங்கப்பட்ட சாக்கடை அடைப்புகளை அகற்றுவதற்காக புதிதாக வழங்கப்பட்ட ரோபோ இயந்திரத்தை பயன்படுத்துவதற்கு பணியாளர்கள் நியமனம் செய்யாமல் அதற்கு பதிலாக துப்புரவு பணியாளர்களை கொண்டு எந்த ஒரு உபகரங்களும் இன்றி வெறும் கையில் சுத்தம் செய்யப்பட்டு வருகிறது குறிப்பிடத்தக்கது.எனவே மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழக அரசு இதுபோன்ற செயலில் ஈடுபடும் நகராட்சி அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.