குடிநீர் வசதி செய்து தரக்கோரி பேரூராட்சி அலுவலகத்தில் முறையிட சென்ற துப்புரவு பணியாளர்களை சாதி பெயரை கூறி ஒருமையில்  திட்டியதாக கொடுத்த  புகாரின் அடிப்படையில், தேவதானப்பட்டி பேரூராட்சி மன்றத் துணைத் தலைவர் மீது  எஸ்சி, எஸ்டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் மூன்று மாதங்களுக்கு பின் தேவதானப்பட்டி காவல் நிலையத்தில்  வழக்குப் பதிவு செய்யப்பட்டது.


Kuwait Fire Accident: தீ விபத்தில் 40 இந்தியர்கள் உட்பட 53 பேர் உயிரிழப்பு: குவைத் விரையும் இந்திய வெளியுறவுத்துறை




தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள தேவதானப்பட்டி பேரூராட்சியின் ஒன்பதாவது வார்டு உறுப்பினர் நிபந்தன். இவர் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்று தேவதானப்பட்டி பேரூராட்சி மன்ற துணைத் தலைவராக பொறுப்பு வகித்து வருகிறார்.


இந்நிலையில், கடந்த பிப்ரவரி மாதம் 29ஆம் தேதி நகர்மன்ற துணைத் தலைவரின் ஒன்பதாவது வார்டில் உள்ள துப்புரவு பணியாளர்களுக்கு குடியிருப்பதற்காக பேரூராட்சி சார்பில் குடியிருப்பு கட்டி கொடுக்கப்பட்டுள்ளது.  இந்த நிலையில் அப்பகுதியில் சாலை பணிகள் மேற்கொள்வதற்காக பணிகள் நடைபெற்ற பொழுது குடிநீர் குழாய் துண்டிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.


இதனால் துப்புரவு பணியாளர்கள் குடியிருக்கும் பகுதிக்கு குடிநீர் வழங்க முடியாத நிலை ஏற்பட்டதால், குடிநீர் வழங்கிட கோரி  துப்புரவு பணியாளர்கள் தேவதானப்பட்டி பேரூராட்சி அலுவலகத்தில் 15க்கும் மேற்பட்டோர்  மனு கொடுக்க சென்றபொழுது  தேவதானப்பட்டி பேரூராட்சி மன்றத்தின்  துணைத் தலைவராக உள்ள திமுகவைச் சேர்ந்த  நிபந்தன் என்பவர், ‘போய் கலெக்டர பாரு, ஸ்டாலினை பாரு யார வேணாலும் பாரு, நோட்டீஸ் கொடுத்து எல்லாத்தையும் வெளியேற்றுவேன்,


Breaking News LIVE: ஜம்மு காஷ்மீர் : கண்டி வனப்பகுதியில் பரவிய தீ.. பரபர வீடியோ காட்சிகள்




உங்களுக்கு அவ்வளவு திமிர் இருந்தால் என் திமிரை நான் காட்டுவேன், கோட்டர்ஸ்ல துப்புரவு பணியாளர்களை தவிர்த்து குடியிருக்கும் அனைவருக்கும் நோட்டீஸ் அனுப்புவேன், நீ சட்டம் பேசினால் நானும் சட்டம் பேசுவேன், கோட்டர்ஸ்ல குடியிருந்திருவியா, போராட்டம் பண்ணி ஒன்னும் நடக்காது’ என ஒருமையில்  பேசி ஜாதி பெயரை சொல்லி திட்டியதாக கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பாக அறிவழகன் என்ற துப்புரவு பணியாளர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் கொடுத்தார்.


இந்த நிலையில், மூன்று மாதங்களுக்கு பின் திமுகவைச் சேர்ந்த தேவதானப்பட்டி பேரூராட்சி மன்ற துணைத் தலைவர் நிபுந்தன் மீது மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் உத்தரவின் அடிப்படையில், தேவதானப்பட்டி காவல்துறையினர் எஸ்சி, எஸ்டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.