மதுரை மாநகராட்சிக்குட்பட்ட ஆணையூர், கூடல்நகர், திருப்பாலை உள்ளிட்ட பகுதிகளில் 103 இடங்களில் 16 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய தார்சாலை அமைக்கும் பணியினை வணிகவரி மற்றும் பதிவு துறை அமைச்சர் மூர்த்தி துவக்கி வைத்தார். இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மூர்த்தி, முதல்வரை போலவே உதயநிதி ஸ்டாலின் சிறப்பாக செயல்பட்டு வருகிறார். தி.மு.க வெற்றிக்காக இரவு பகலாக பாடுபட்டவர்.  உதயநிதி அனைவராலும் பாராட்டும் அளவில் செயல்பட்டு வருகிறார். வெகு விரைவில் உதயநிதி அமைச்சராக வரவேண்டும். தமிழ்நாடு முழுவதும் அமைச்சராக அவரது பணி தொடர வேண்டும் என்பது மக்களின் விருப்பமாக உள்ளது.

 



வெகு விரைவில் பிராம்மாண்டமான வகையில் மக்கள் நலத்திட்டங்களை முதல்வர் வழங்க உள்ளார். தேதி விரைவில் வெளியிடப்படும். மதுரைக்கான கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத பல வளர்ச்சி திட்டங்களை முதல்வர் அறிவிக்க உள்ளார். மதுரையில் 16 கோடி ரூபாய் மதிப்பீட்டில் இன்று துவங்கிய சாலை செப்பனிடும் பணிகள் ஒன்றரை மாதத்தில் நிறுவடையும்”. என்றார்.






 

அதே போல் மதுரை மாவட்டத்தில் கூட்டுறவுத்துறை சார்பில் கூட்டுறவு மருந்தகம் மதுரை செக்கானூரணி பகுதியில் தொடங்கப்பட்டு தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களால் காணொலி காட்சி மூலம் தொடங்கிவைக்கப்பட்டது இதில் கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி, வணிகவரித்துறை அமைச்சர் பி.மூர்த்தி ஆகியோர் கலந்துகொண்டு குத்து விளக்கேற்றி திறந்துவைத்தனர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்து கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி பேசியதாவது...,” கூட்டுறவு மருந்தகம் சார்பாக 20 % தள்ளுபடி விலையில் ஏழை எளிய மக்களுக்கு கிராமங்கள் தோறும் அவர்கள் அனைவருக்கும் 2010ம் ஆண்டு கலைஞர் அவர்களால் தொடங்கிவைக்கப்பட்ட திட்டம். தற்போதைய தமிழ்நாடு முதல்வர் அந்த திட்டத்தை விரிவுபடுத்தியுள்ளார். ஆண்டுக்கு 60 மருந்தகங்கள் கூட்டுறவு மருந்தங்கள் திறக்க திட்டமிட்டுள்ளார். ஏற்கனவே 300 மருந்தகங்கள் உள்ளது. தமிழ்நாடு முழுவதும் 70 மருந்தகங்கள் திறக்க திட்டமிடப்பட்டுள்ளது. ஏழை எளிய மக்கள் குறைந்த விலையில் தனியார் மருந்தகங்களை விட குறைந்த விலையில் மக்கள் வாங்குவதற்காக இந்த கூட்டுறவு மருந்தகங்கள் தொடங்கப்படுகின்றன என்றார்.