தேமுதிக தலைவர் விஜயகாந்த் மறைவு 


தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல்நலக்குறைவு காரணமாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் நேற்று காலை அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதாக தேமுதிக தரப்பில் அறிக்கை வெளியிடப்பட்டது. இது தொடர்பான அறிக்கையில் அவருக்கு மூச்சு விடுவதில் சிரமம் இருப்பதால் வெண்டிலேட்டர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. தேமுதிக தலைவர் விஜயகாந்த் கடந்த சில ஆண்டுகளாக பல்வேறு உடல்நலப் பிரச்னைகள் காரணமாக உள்ளூர் மற்றும் வெளிநாடுகளில் சிகிச்சை பெற்று வந்தார்.








இதனிடையே கடந்த நவம்பர் 18 ஆம் தேதி லேசான காய்ச்சல், சளி மற்றும் இருமல் காரணமாக விஜயகாந்த் சென்னை போரூரில் உள்ள மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கிட்டதட்ட 23 நாட்கள் சிகிச்சைக்குப் பின் அவர் கடந்த டிசம்பர் 11 ஆம் தேதி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போது அவரது உடல்நிலை குறித்து பல்வேறு வதந்திகள் பரப்பப்பட்டது. ஆனால் இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், கேப்டன் உடன் இணைந்து புகைப்படம் எடுத்து வெளியிட்டிருந்தார், அதேபோல் செய்தியாளர்கள் சந்திப்பில் பிரேமலதா விஜயகாந்த் அவரது உடல்நிலை சீராக உள்ளது தேவையற்ற வதந்திகளை பரப்ப வேண்டாம் என தெரிவித்தார். மேலும், மருத்துவமனை அறிக்கையும் வெளியிடப்பட்டது. இந்நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன் உடல்நலக்குறைவால் மீண்டும் மருத்துவனையில் அனுமதிக்கப்பட்ட விஜயகாந்த்  நேற்று காலமானதாக தெரிவிக்கப்பட்டது. இதனால் உலகத் தமிழகர்கள் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.




மதுரையில் நடிகர் விஜயகாந்திற்கு அஞ்சலி


விஜயகாந்த் மறைவை தொடர்ந்து தேமுதி தொண்டர்கள் மதுரை அவனியாபுரம் பகுதியில் மொட்டை அடித்து தங்கள் துக்கத்தை வெளிப்படுத்தினர். தேமுதிக தலைவர் விஜயகாந்த் நேற்று காலை உடல் நலக்குறைவால் உயிரிழந்த நிலையில் தமிழக முழுவதும் உள்ள அவரது ரசிகர்கள் அஞ்சலி செலுத்துவதற்காக சென்னையை நோக்கி புறப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில் அவரது உடல் சொந்த ஊரான மதுரைக்கு கொண்டு வராமல் சென்னையில் உள்ள தேமுதிக அலுவலகத்தில் அடக்கம் செய்யப்பட உள்ள நிலையில் மதுரை அவனியாபுரத்தில் சார்பாக அனைத்து கட்சி நிர்வாகிகளுடன் இரங்கல் கூட்டம் நடைபெற்றது. இதை தொடர்ந்து தேமுதிக தொண்டர்கள் திமுக, அதிமுக மற்றும் அனைத்து கட்சி நிர்வாகிகள் இணைந்து அவனியாபுரத்தில் முக்கிய வீதிகளில் அமைதிப் பேரணி மேற்கொண்டு 2 நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தினார்கள்.