பழனி-கொடைக்கானல் சாலை தேக்கங்தோட்டம் பகுதியில் இரவு நேரத்தில் உலா வந்த ஒற்றை யானையால் சுற்றுலா பயணிகள், பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.

CM M.K.Stalin Spech: ”ஸ்பெயின் பயணம் சாதனை பயணமாக அமைந்தது”.. சென்னை திரும்பிய முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு!

கொடைக்கானல் ப‌ண்ணைக்காடு, தாண்டிக்குடி செல்லும் பிர‌தான‌ சாலைகளில் ஒற்றை காட்டு யானை வாகனங்களை வழிமறித்து விரட்டுவதால் வாகன ஓட்டிகள் அச்சமடைந்துள்ளனர். காட்டு யானையை வ‌ன‌ப்ப‌குதிக்குள் விரட்ட பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

விஜய் தொடங்கிய அரசியல் கட்சி - ஸ்பெயினில் இருந்து திரும்பியதும் முதலமைச்சர் ஸ்டாலின் சொன்னது என்ன?

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் கீழ்மலை பகுதிகளான கோம்பை, பள்ளங்கி, பேத்துப்பாறை, பாரதி அண்ணாநகர், அஞ்சு வீடு, பண்ணைக்காடு,  தாண்டிக்குடி உள்ளிட்ட மலை கிராமங்களில் முக்கிய தொழிலாக விவசாயம் செய்யப்படுகிறது. இங்கு  வாழை, பலா, பீன்ஸ், உருளை கிழங்கு, அவகோடா உள்ளிட்டவை முக்கிய பயிர்களாக விவசாயம் செய்யப்படுகிறது.

“பிரதமர் பேச்சை பார்த்தேன், படித்தேன், சிரித்தேன்”.. நாடாளுமன்றத்தில் பிரதமர் பேச்சு குறித்து முதலமைச்சர் ஸ்டாலின்!

இந்த கிராமபுறங்கள் அனைத்தும் பழனி தேக்கந்தோட்டம் பகுதியின் மலையடிவார பகுதியாக இருப்பதால், இப்பகுதியை ஒட்டியுள்ள வனப் பகுதியின் வழியாக கொடைக்கானல் பகுதியில் ஊருக்குள் காட்டு யானை அடிக்கடி வருகிறது. மேலும் இந்த மலை கிராமங்களில் விளைவிக்கப்படும் பயிர்களை வனப்பகுதியிலிருந்து வெளியேறும் காட்டு யானைகள் விவசாய நிலங்களையும், விளை பயிர்களையும் சேதப்படுத்தி வருவதும் தொடர் கதையாக உள்ளது என  இப்பகுதி மக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

இந்த நிலையில், நேற்று இரவு நேரத்தில் ஒற்றை காட்டு யானை பழனி கொடைக்கானல் சாலையில் உலா வந்தது. தேக்கங்தோட்டம் பகுதியில் சாலையில் உலா வந்த காட்டு யானையை பார்த்து பொதுமக்களும், வாகன ஓட்டிகளையும் அச்சமடைய செய்துள்ளது. வனத்துறையினர் காட்டு யானையின் நடமாட்டத்தை கண்காணிக்க வேண்டும் வனப்பகுதியை விட்டு காட்டு யானைகள் வெளியேறுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.