பழனி மலைக்கோயிலில் பக்தர் மீது கொலை வெறி தாக்குதல் நடத்தியதாக ஊழியர்களை கண்டித்தும் அதற்கு துணை போனதாக தேவஸ்தான நிர்வாகத்தை கண்டித்தும் இந்து முன்னனி மாநில தலைவர் காடேஸ்வர சுப்ரமணியம் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
Chennai NIA Raid: சென்னையில் மீண்டும் என்.ஐ.ஏ., சோதனை - மாவோயிஸ்ட்கள் தொடர்பாக விசாரணை
திண்டுக்கல் மாவட்டம் பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் கடந்த 30ம் தேதி காவடி கொண்டு வந்த எடப்பாடியைச் சேர்ந்த முருக பக்தர் சந்திரன் என்பவர் தரிசன வரிசையில் காத்திருந்தபோது வரிசையில் நிற்காத பக்தர்களை முன்னுரிமை கொடுத்து அனுப்பியதால் ஆத்திரமடைந்த பக்தர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது எடப்பாடி பக்தர் மீது கொலை வெறி தாக்குதல் நடத்தியதில் சந்திரன் என்ற பக்தருக்கு மண்டை உடைந்தது. அப்போது பக்தர்கள் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பழனி மலை கோயிலில் போராட்டத்தில் ஈடுபட்டனர். போலீசார் குவிக்கப்பட்டு அந்த பக்தருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.
PNB Recruitment: வங்கி வேலை வேண்டுமா?1025 பணியிடங்கள்; யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?
கொலைவெறி தாக்குதல் நடத்திய ஊழியர்கள் மற்றும் அதற்கு துணை போன தேவஸ்தான ஊழியர்களை கண்டித்து இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியன் தலைமையில் பழனி பேருந்து நிலையம் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் தமிழகம் முழுவதும் இருக்கும் கோவில்களில் பக்தர்கள் மீது தொடர் தாக்குதலை கண்டித்து கடந்த சில நாட்களுக்கு முன்பு திருச்சி ஸ்ரீரங்கம் கோவிலில் ஆந்திர பக்தர் மீது தாக்குதல் நடத்திய சம்பவம் உள்ளிட்ட சம்பவங்களை கண்டித்தும் ,
Today Rasipalan February 08: தனுசுக்கு ஜெயம்; துலாமுக்கு கவலை - உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்!
சம்பவங்களுக்கு காரணமான ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அறநிலையத்துறை கண்டித்தும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மாநிலச் செயலாளர் செந்தில், மதுரை கோட்ட செயலாளர் பாலன், இந்து வியாபாரிகள் சங்கம் ஜெகன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார்.