பஞ்சாப் நேஷனல் வங்கியில் (PUNJAB NATIONAL BANK) காலியாக உள்ள அதிகாரி மற்றும் மேலாளர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
பணி விவரம்
அதிகாரி (Credit)
மேலாளர் (Forex)
மேலாளர் (Cyber Security)
மூத்த மேலாளார் (சைபர் செக்யூரிட்டி)
மொத்த பணியிடங்கள் - 1025
கல்வித் தகுதி
- அதிகாரி பணிக்கு விண்ணப்பிக்க Chartered Accountant படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். CMA படித்தவர்களும் விண்ணப்பிக்கலாம்.
- மேலாளர் பணிக்கு எம்.பி,ஏ. அல்லது மேலாண்மை பணியில் டிப்ளமோ படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். Forex பயன்படுத்துவதில் அனுபவம் இருக்க வேண்டும்.
- மேலாளர் பொறியியல், பி.டெட். படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
- மூத்த மேலாளர் பணிக்கு விண்ணப்பிக்க எம்.சி.ஏ., பி.டெக். படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு
இதற்கு 21 வயது பூர்த்தியடைந்தவராகவும் 28 வயதுக்கு மிகாமலும் இருக்க வேண்டும்.
ஊதிய விவரம்
அதிகாரி (Credit) - ரூ.36,000
மேலாளர் (Forex) - ரூ.48,170
மேலாளர் (Cyber Security) - ரூ.48,170
மூத்த மேலாளார் (சைபர் செக்யூரிட்டி) - ரூ.63,840
எப்படி தேர்வு செய்யப்படுகிறார்கள்:
ஆன்லைன் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்ப கட்டணம்
பொதுப் பிரிவினர் மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.1180 விண்ணப்ப கட்டணமாக செலுத்த வேண்டும். பட்டியல் / பழங்குடியின மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கு ரூ.59 கட்டணம் ஆகும். கட்டண தொகை ஆன்லைன் மூலம் மட்டுமே செலுத்த வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை
https://www.pnbindia.in/ - என்ற இணைப்பை க்ளிக் செய்து ஆன்லைன் மூலம் தேவையான விவரங்களை பூர்த்தி செய்து விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி தேதி - 24.02.2024
இது தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு https://www.pnbindia.in/downloadprocess.aspx?fid=sybvSSMeHGNM5vnaIe0E6w== -என்ற இணைப்பை க்ளிக் செய்து காணவும்.