திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள உலகப்புகழ்பெற்ற முருகன் கடவுளின் அறுபடை வீடுகளில் 3-ம் படைவீடான பழனி முருகன் கோவிலுக்கு அடிவாரத்தில் இருந்து செல்ல படிப்பாதை, யானைப்பாதை ஆகியவை பிரதானமாக உள்ளன. பக்தர்களின் வசதிக்காக மின்இழுவை ரயில், ரோப் கார் சேவையும் உள்ளது.
தேனி : ஆதரவாளர்களை பெருக்கும் ஓபிஎஸ்.. அடுத்த கட்ட நகர்வு என்ன?
இதில் விரைவாகவும், இயற்கை அழகை ரசித்தபடியும் செல்ல முடிவதால் குழந்தைகள், முதியோர்கள் என அனைவரின் முதல் தேர்வாக ரோப்கார் உள்ளது. ரோப்காரில் தினமும் ஒரு மணி நேரம், மாதத்துக்கு ஒருநாள் மற்றும் ஆண்டுக்கு 45 நாட்கள் என பராமரிப்பு பணிகள் மேற்கொள்வது வழக்கம். அதன்படி இந்த ஆண்டுக்கான வருடாந்திர பராமரிப்பு பணி கடந்த ஜூன் மாதம் 16-ந் தேதி தொடங்கியது. இதனால் அன்றைய தினத்தில் இருந்து ரோப்கார் சேவை நிறுத்தப்பட்டது.
முதற்கட்டமாக ரோப்காரில் உள்ள பற்சக்கரங்கள், கம்பிவடம் (ரோப்), பெட்டிகள், எந்திரங்கள் உள்ளிட்டவை கழற்றப்பட்டு பராமரிப்பு பணி மேற்கொள்ளப்பட்டது. கடந்த சில நாட்களுக்கு முன்பு புதிதாக கொண்டுவரப்பட்ட 'சாப்ட்டு', கம்பிவடம் (ரோப்) பொருத்தப்பட்டு அதிகாரிகள் குழுவினர் சோதனை செய்தனர். நேற்று ரோப்காரில் சோதனை ஓட்டம் நடந்தது.
SSLV D1-EOS-2 Launched: 2 செயற்கைக்கோள்களுடன் விண்ணில் பாய்ந்தது எஸ்.எஸ்.எல்.வி ராக்கெட்!
இந்தநிலையில் ரோப் காரில் பராமரிப்பு பணிகள் அனைத்தும் நிறைவு பெற்றதால் சேவை தொடங்கப்பட்டுள்ளது. முன்னதாக அடிவாரத்தில் உள்ள ரோப்கார் நிலையத்தில் சிறப்பு பூஜை நடைபெற்றது. இதில் இணை ஆணையர் நடராஜன், செயற்பொறியாளர்கள் சாந்தகுமார், நாச்சிமுத்து, பொறியாளர்கள் குமார், பார்த்திபன், மோகன் மற்றும் அதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர். பழனி முருகன் கோவிலில் ரோப்கார் சேவை தொடங்கியதால், பக்தர்கள் மிகுந்த ஆர்வத்துடன் அதில் பயணம் செய்தனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்