ஜூலை 30 சர்வதேச நண்பர்கள் தினமாக கொண்டாடப்படுகிறது. ஐக்கிய நாடுகள் ஜூலை 30 நண்பர்கள் தினமாக அறிவித்த நிலையில், இந்தியா ஆகஸ்ட் மாதம் முதல் ஞயிற்றுக்கிழமை கொண்டாடி வருகிறது.
சர்வதேச நண்பர்கள் தினம் 2022: ஏன் கொண்டாடப்படுகிறது?
2011 ஆம் ஆண்டில், ஐக்கிய நாடுகளின் பொதுச் சபை சர்வதேச நட்பு தினத்தை அறிவித்தது, இனம், நிறம், பாலினம், மதம் ஆகியவற்றைப் பொருட்படுத்தாமல் பல்வேறு நாடுகளின் மக்களின் வலுவான நட்பை உருவாக்கும் நோக்கத்துடன் உருவாகப்பட்டது.
சர்வதேச நண்பர்கள் தினம் தோற்றம்:
முதன்முதலில் 1958-ல் கொண்டாடப்பட்டது, ஐக்கிய நாடுகளின் பொதுச் சபை 2011 இல் சர்வதேச நண்பர்கள் தினத்தை அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. ஆகஸ்ட் மாதத்தின் முதல் ஞாயிற்றுக்கிழமை நண்பர்கள் தினமாக பல நாடுகளில் கொண்டாடப்பட்டு வருகிறது.
ஆகஸ்ட் மாதத்தின் முதல் ஞாயிற்றுக்கிழமை நண்பர்கள் தினம்
இந்தியாவில் ஆகஸ்ட் 7ம் தேதி நண்பர்கள் தினம் கொண்டாடப்படுகிறது. ஆகஸ்ட் முதல் ஞாயிற்றுக்கிழமை, நண்பர்கள் தினம் கொண்டாடப்படுகிறது. இந்தியா மட்டுமின்றி, வங்கதேசம், மலேசியா, ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட நாடுகளும் வரும் ஞாயிறு அன்று நண்பர்கள் தினத்தை கொண்டாடுகிறது.
நண்பர்கள் தினத்தை போற்றும் காவல்துறை
நண்பர்கள் தினத்தை போற்றும் வகையில் மதுரை மாநகர போக்குவரத்து காவல்துறையினர் சார்பில் மதுரை தெப்பக்குளம் போக்குவரத்து காவல் ஆய்வாளர் தெப்பக்குளம் பகுதியில் உள்ள 16 கால் மண்டபம் அருகில் சாலையில் சென்று கொண்டிருந்த வாகனங்களை போட்டிகளிடம் செக்கிங் செய்வது போல் நிறுத்திய வாகன ஓட்டிகளிடம் தேசிய கொடி மற்றும் இனிப்பு வழங்கி வித்தியாசம் உள்ள முறையில் நண்பர்கள் தின வாழ்த்து தெரிவித்தனர். அதேபோல் பேருந்து ஓட்டுனர் நடத்துனர் பயணிகளிடம் மூவர்ண தேசிய கொடியை கொடுத்து "காவல்துறையினர் உங்கள் நண்பன்" என்று கூறி நண்பர்கள் தின வாழ்த்து தெரிவித்தார். நண்பர்கள் தின வாழ்த்தை வித்தியாசமான முறையில் கூறிய மதுரை மாநகர போக்குவரத்து காவல்துறையினரின், அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
நண்பர்கள் தினத்தின் முக்கியத்துவம்: சர்வதேச நண்பர்கள் தினம், ஐக்கிய நாடுகள் சபையின் கூற்றுப்படி, உலக அமைதி மற்றும் சமூக நல்லிணக்கத்தை முன்னேற்றுவதற்கு பங்களிப்பதற்காக கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் மதுரையில் காவல்துறையினர் பொதுமக்களிடம் இணைப்பை ஏற்படுத்தும் வகையில் நண்பர்கள் தினம் கொண்டாடியது வரவேற்பை பெற்றுள்ளது.