காமன்வெல்த் போட்டியின் 9வது நாள் இந்தியா வரலாற்றில் என்றும் இல்லாத அளவிற்கு சிறப்பான நாளாக அமைந்தது. நேற்றைய நாளில் மட்டும் இந்திய அணி 4 தங்கம் உள்பட 14 பதக்கங்களை கைப்பற்றி அசத்தியது. மேலும், காமன்வெல்த் பதக்கப்பட்டியலில் இந்தியா 13 தங்கம், 11 வெள்ளி, 16 வெண்கல பதக்கங்களுடன் இந்தியா 5வது இடத்தில் உள்ளது. 

காமன்வெல்த் போட்டியின் நேற்றைய 9வது நாளில் இந்திய வீரர்கள் ரவி தஹியா, வினேஷ் போகட், நவீன் குமார் மற்றும் பவினா படேல் ஆகியோர் இந்தியாவுக்காக தங்கப் பதக்கங்களை வென்றனர். அதே நேரத்தில், இந்தியாவிற்கு மூன்று வெள்ளி மற்றும் ஏழு வெண்கலப் பதக்கங்களைக் குவித்து மொத்தம் 14 பதக்கங்களை கைப்பற்றியது. இதுவரை பர்மிங்காம் 2022 தொடரில் நேற்றைய நாள் இந்தியாவிற்கு இது சிறந்த நாளாக அமைந்தது. 

இதன் மூலம் காமன்வெல்த் விளையாட்டு 2022 தொடரில் இந்திய அணி இதுவரை 40 பதக்கங்களை பெற்றுள்ளது. இந்த நிலையில், காமன்வெல்த் போட்டியின் 9வது நாள் முடிவில் பதக்க பட்டியலில் முதலிடத்தில் எந்த நாடு உள்ளது..? இந்தியாவிற்கு எத்தனையாவது இடம் ? என்பதை கீழே காணலாம்.

  ரேங்   நாடுகள்      தங்கம்    வெள்ளி  வெண்கலம்   மொத்தம்
1 ஆஸ்திரேலியா 59 46 50 155
2 இங்கிலாந்து 50 52 46 148
3 கனடா  22 29 33 84
4 நியூசிலாந்து 17 13 14 44
5 இந்தியா 13 11 16 40
6 நைஜீரியா  9 8 13 30
7 ஸ்காட்லாந்து 8 9 24 41
8 தென்னாப்பிரிக்கா 7 8 11 26
9  மலேசியா 6 5 4 13
10 ஜமைக்கா 6 4 2 12

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண