திருச்செந்தூரை தொடர்ந்து பழனி முருகன் கோயிலிலும் பக்தர் மயங்கி விழுந்து உயிரிழப்பு

பழனி மலைக்கோவிலுக்கு சாமி தரிசனம் செய்வதற்காக வரிசையில் நின்றிருந்த பக்தர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Continues below advertisement

உலகத் தமிழர்களின் முதற்கடவுள் முருக பெருமான் எனவும், தமிழகத்தில் உள்ள பல்வேறு ஆன்மீக ஸ்தலங்களில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு ஆன்மீக ஸ்தலமாக விளங்குகிறது பழனி முருகன் கோவில். தமிழ்க்கடவுள் என்று அழைக்கப்படும் முருகனுக்கு அறுபடை வீடுகள் உள்ளது. இந்த அறுபடை வீடுகளில் மூன்றாம் படை திண்டுக்கல் மாவட்டம் பழனியில் உள்ள அருள்மிகு ஸ்ரீ தண்டாயுதபாணி திருக்கோயிலாகும்.

Continues below advertisement

CM Stalin: இது ஆரம்பம் தான்..! அபாய ஒலி, தொகுதி மறுசீரமைப்பு விவகாரம், முதலமைச்சர் ஸ்டாலின் அதிரடி


திண்டுக்கல் மாவட்டம் பழனி மலைக்கோவிலில் தரிசனத்துக்கு சென்ற பக்தர் திடீர் மாரடைப்பு ஏற்பட்டு மயங்கினார். உடனடியாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். ஏற்கனவே திருச்செந்தூர், ராமேஸ்வரம் கோவிலில் அடுத்தடுத்து பக்தர்கள் இறந்த  செய்தி வந்துள்ள நிலையில் இன்று பழனி மலைக்கோவிலில் பக்தர் ஒருவர் உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் பழனி முருகன் கோவில் மிகவும் பிரசித்திப்பெற்றதாக உள்ளது. இந்த கோவிலுக்கும் தமிழ்நாடு முழுவதும் மட்டுமின்றி வெளிமாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இந்நிலையில்  நேற்று மார்ச் 20ம் தேதி பழனி முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்ய வரிசையில் நின்ற பக்தர் ஒருவருக்கு திடீரென்று நெஞ்சுவலி ஏற்பட்டது. இதையடுத்து அவர் உடனடியாக மீட்கப்பட்டு பழனி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அட்ரா சக்க.. ரூ.54,000 கோடியில் நவீனமயமாகும் இந்திய ராணுவம்.. ஓகே சொன்ன ராஜ்நாத்...


மருத்துவமனையில் அந்த நபருக்கு தீவிர சிகிச்சை என்பது அளிக்கப்பட்டது. இருப்பினும் சிகிச்சை பலனின்றி அந்த நபர் உயிரிழந்தார். விசாரணையில் நெஞ்சு வலியால் இறந்த நபர் நாமக்கல் மாவட்டம் மோகனூரை சேர்ந்த செல்வமணி என்பது தெரியவந்தது. மேலும் செல்வமணி தனது பகுதியை சேர்ந்தவர்களுடன் கேரளா மாநிலம் சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு சென்று தரிசனம் செய்தார்.  ஐயப்பன் தரிசனத்தை முடித்தபிறகு செல்வமணி தான் பழனி முருகன் கோவிலுக்கு சென்றுவிட்டு வீட்டுக்கு செல்லலாம் என்று அனைத்து பக்தர்களையும் அழைத்து கொண்டு வந்துள்ளார். இந்த நிலையில்  செல்வமணி உள்பட அவருடன் வந்தவர் படிக்கட்டு வழியாக கோவிலுக்கு மேல் ஏறியுள்ளனர். அதன்பிறகு தரிசனத்துக்கு வரிசையில் காத்திருந்தபோது செல்வமணி மாரடைப்பு ஏற்பட்டு பலியானது பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

IPL 2025 Opening Ceremony: ஐபிஎல் தொடக்க விழா - கலைநிகழ்ச்சி, களமிறங்கும் நட்சத்திரங்கள் யார்? நேரம்? நேரலை? முழு விவரங்கள்


இதற்கிடையில் திருச்செந்தூர். சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கடந்த 16ம் தேதி சாமி தரிசனத்துக்கு சென்ற காரைக்குடியை சேர்ந்த ஓம்குமார் என்பவர் மூச்சுத்திணறல் காரணமாக உயிரிழந்தார். அதன்பிறகு ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் உள்ள ராமநாதசுவாமி கோவிலில் தரிசனத்துக்கு சென்ற ராஜஸ்தானை சேர்ந்த ராஜ்தாஸ் என்பவர் இறந்தார். இதன் தொடர்ச்சியாக தான் பழனி முருகன் கோவிலில் செல்வமணி உயிரிழந்துள்ளது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 4 நாளில் மட்டும் தமிழகத்தில் உள்ள முக்கிய 3 கோவில்களில் 3 பக்தர்கள் இறந்திருப்பது பெரும் கவலையை ஏற்படுத்தி உள்ளது. இந்த கோவில்களில் பக்தர்களின் பாதுகாப்புக்கு தேவையான நடவடிக்கைகளை அறநிலையத்துறை மேற்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கை என்பது இப்போது வலுத்துள்ளது.

Continues below advertisement