திண்டுக்கல் மாவட்டம் பழனி முருகன் கோவிலில் இன்று  கும்பாபிஷேகம் நடைபெற்றது. அதேபோல் நாளை மறுநாள் ஞாயிற்றுக்கிழமை தைப்பூச திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. கும்பாபிஷேகம், தைப்பூசத்தை முன்னிட்டு மதுரை, பழனி மற்றும் பழனி வழியே திண்டுக்கல், கோவைக்கு சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது என ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.


Palani Kumbabishekam: ஓங்கி ஒலித்த ‘அரோகரா’ கோஷம்... பழனி முருகன் கோயிலில் வெகுவிமரிசையாக நடந்த கும்பாபிஷேகம்!




அதன்படி, நேற்று, இன்று என 2 நாட்கள் மற்றும் பிப்ரவரி 3-ந்தேதி முதல் 5-ந்தேதி வரை என மொத்தம் 5 நாட்கள் இந்த ரயில்கள் இயக்கப்படுகிறது. அதன்படி, மதுரை, பழனி இடையே இயக்கப்படும் ரயில் வண்டி எண் 06080 மதுரையில் இருந்து காலை 10 மணிக்கு புறப்படுகிறது. சோழவந்தான், கொடைரோடு, திண்டுக்கல், ஒட்டன்சத்திரம் வழியாக 12.30 மணிக்கு பழனி வந்தடைகிறது. பின்னர் பழனியில் இருந்து ரயில் வண்டி எண் 06079 மதியம் 2.30 மணிக்கு புறப்பட்டு மாலை 5 மணிக்கு மதுரை சென்றடைகிறது.


Palani Kumbabishekam: 16 ஆண்டுகளுக்குப் பின் விமரிசையாக நடந்த பழனி முருகன் கோயில் குடமுழுக்கு விழா


சென்னையில் பரபரப்பு..ஆயிரம் விளக்கு பகுதியில் அறிவிப்பு இல்லாமல் கட்டிடம் இடிப்பு... சுற்றுச்சுவர் இடிந்து விழுந்ததில் பெண் உயிரிழப்பு


இதேபோல் கோவை, திண்டுக்கல் ரயில் எண் 06077 காலை 9.20 மணிக்கு கோவையில் இருந்து புறப்பட்டு பொள்ளாச்சி, உடுமலை, மடத்துக்குளம் வழியக 11.38 மணிக்கு பழனி வந்தடைகிறது. பின்னர் பழனியில் இருந்து 11.43 மணிக்கு புறப்பட்டு ஒட்டன்சத்திரம் வழியாக 1 மணிக்கு திண்டுக்கல் சென்றடைகிறது. பின்னர் திண்டுக்கல்லில் இருந்து மதியம் 2 மணிக்கு புறப்படும் ரயில் எண் 06078 மதியம் 2.55 மணிக்கு பழனி வருகிறது. பின்னர் 3 மணிக்கு பழனியில் இருந்து புறப்பட்டு உடுமலை, பொள்ளாச்சி வழியாக மாலை 5.30 மணிக்கு கோவை சென்றடைகிறது.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைதள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண