முன்னாள் முதல்-அமைச்சரும் அதிமுக ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வத்தின் மகனும், தேனி பாராளுமன்ற உறுப்பினரான ஓ.பி.ரவீந்திரநாத் நேற்று பழனி முருகன் கோயிலுக்கு சாமி தரிசனம் செய்ய வந்தார். அடிவாரத்தில் இருந்து ரோப்கார் மூலம் மலைக்கோயிலுக்கு சென்றவர், சாயரட்சை பூஜையில் கலந்துகொண்டு முருகப்பெருமானை தரிசித்து வழிபட்டார். தொடர்ந்து இரவு 7 மணிக்கு நடைபெற்ற தங்கரத புறப்பாட்டிலும் கலந்துகொண்டார்.

Suresh Raina: ஐபிஎல் மற்றும் முதல் தர கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வை அறிவித்த ரெய்னா

பின்னர் அவர் செய்தியாளர்களை சந்தித்து அளித்த பேட்டியில் பேசியதாவது, தமிழக  அரசு சார்பில் தமிழகத்தில் உயர்கல்வி படிக்கும் மாணவிகளுக்கு ரூ.1000 வழங்கும் அரசின் புதுமைப்பெண் திட்டத்தை  தான் வரவேற்பதாகவும், ஓபிஎஸ், இபிஎஸ் இடையிலான நீதிமன்ற போட்டியில் அ.தி.மு.க. தொடர்பான வழக்கில் மேல்முறையீடு செய்வது பற்றி சட்ட வல்லுனர்களுடன் ஆலோசித்து முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அறிவிப்பார் எனவும் கூறினார்.

Ponniyin Selvan Audio Launch LIVE: ’பொன்னியின் செல்வன்’ பிரம்மாண்ட ட்ரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழா! அப்டேட்ஸ் உடனுக்குடன்..

Asia Cup 2022, IND vs SL: ஆசிய கோப்பை: இலங்கை போட்டியில் களமிறங்குகிறாரா தினேஷ் கார்த்திக்? அதிரடி மாற்றங்கள்..

மேலும், தமிழகத்தில் அடுத்து நடைபெறும் தேர்தல்களில் அ.தி.மு.க. வெற்றி பெற வேண்டும் என்றால் சசிகலா, டி.டி.வி.தினகரன் உள்பட அதிமுகவிலிருந்து பிரிந்து சென்றவர்கள் அனைவரும் மீண்டும் இணைந்து அ.தி.மு.க.வை பலப்படுத்த வேண்டுமென்றும் கூறினார்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண