பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் ஒரே நேரத்தில் 72 பேர் பயணிக்கும் வகையில் நவீன வசதிகளுடன் கூடிய மின் இழுவை ரயிலை பக்தர்கள் பயன்பாட்டிற்கு அமைச்சர் சக்கரபாணி துவக்கி வைத்தார்.


Rahul Gandhi: ”ராமர் அலை” என எதுவும் இல்லை.. அது அரசியல் நிகழ்வு.. ராகுல் காந்தி பேச்சுக்கு பாஜக கண்டனம்



திண்டுக்கல் மாவட்டம் பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் பக்தர்கள் எளிதாக சென்று சாமி தரிசனம் செய்வதற்காக ரோப் கார் சேவை மற்றும் மூன்று மின் இழுவை ரயில்கள்  செயல்பட்டு வருகிறது. மின் இழுவை ரயிலில்  ஒரு பெட்டிக்கு 32 பேர் மட்டுமே பயணிக்கும் வகையில் இருந்தது. அறங்காவலர் குழு தலைவர் சந்திரமோகன் சொந்த செலவில் ஒரு கோடி ரூபாய்  மதிப்பீட்டில் நவீன வசதிகளுடன் கூடிய மூன்றாவது மின் இழுவை ரயில் புதிதாக வாங்கப்பட்டு கடந்த சில மாதங்களாக சோதனையை ஓட்டம் நடைபெற்று வந்தது.


Govt Hostel Fees: பள்ளி, கல்லூரி மாணவர்கள் அதிர்ச்சி - விடுதி உணவுக்கட்டணத்தை உயர்த்தி தமிழக அரசு உத்தரவு



சோதனை ஓட்டம் நிறைவுற்ற நிலையில் ஒரே 72 பேர் பயணம் செய்யும் வகையிலும், குளிர்சாதன வசதி, கண்காணிப்பு கேமிரா என அதிநவீன வசதிகள் கூடிய மின் இழுவை ரயிலை உணவு மற்றும் உணவு பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி இன்று பக்தர்கள் பயன்பாட்டிற்கு துவக்கி வைத்தார். இதன் மூலம் அதிக அளவிலான பக்தர்கள் விரைவாக மலைக்கோவில் சென்று சாமி தரிசனம் செய்து வர முடியும்.


Ayodhya Ram Mandir: அயோத்தியில் அலைமோதும் மக்கள் கூட்டம்.. முதல் நாளில் இத்தனை லட்சம் பேர் தரிசனமா?



நவீன மின் இழுவை ரயில் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டதால் பக்தர்களும் பொதுமக்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். பழனி சட்டமன்ற உறுப்பினர் ஐ.பி செந்தில் குமார் , நாடாளுமன்ற உறுப்பினர் வேலுச்சாமி, கோயில் இணை ஆணையர் மாரிமுத்து, அறங்காவலர் குழு தலைவர் சந்திரமோகன் அறங்காவலர்கள் உறுப்பினர்கள், பொன்ராஜ் , உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.