மதுரை மீனாட்சியம்மன் கோவில் அறங்காவலர் குழு தலைவராக அமைச்சர் பழனிவேல் தியாகராஜனின் தாயாரை தேர்வு செய்து அரசாணை வெளியீடு - தலைவர் தேர்வு நடைபெறுவதற்காக கால அவகாசம் முடிந்த்தாக கூறி குழுத்தலைவரை தேர்வு செய்து அறிவித்த அரசு.
உலக பிரசித்திபெற்ற மதுரை மீனாட்சியம்மன் கோவிலின் அறங்காவலர் குழுத் தலைவராக 2006 முதல் தொடர்ந்து 18 ஆண்டுகளாக கருமுத்துகண்ணன் பதவி வகித்தார் . 2009-ல் மீனாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேகத்தை மற்றும் ஆண்டுதோறும் நடைபெறும் சித்திரை திருவிழா உள்ளிட்ட அனைத்து விழாக்களையும் சிறப்பாக நடத்திவந்தார். இந்நிலையில் அறங்காவலர் குழு தலைவராக பதவியில் இருந்தபோது கருத்துமுத்து கண்ணன் உடல்நலக்குறைவால் கடந்த மே-23 ஆம் தேதி காலாமானர். இந்நிலையில் அறங்காவலர் குழு தலைவர் பதவி காலியாக இருந்த நிலையில் கோவிலின் இணை ஆணையரே அறங்காவலர் குழு தலைவராக பொறுப்பில் இருந்துவந்தார்.
இந்நிலையில் மதுரை மீனாட்சியம்மன் கோவிலுக்கான அறங்காவலர்கள் குழு நியமிப்பது தொடர்பாக இந்து அறநிலையத்துறை ஆலோசகையில் ஈடுபட்டுவந்தது. இந்நிலையில் கடந்த 8ம் தேதியன்று மீனாட்சியம்மன் கோவிலுக்கு 5 புதிய அறங்காவலர் உறுப்பினர்களை நியமித்து இந்து அறநிலையத்துறை அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதில் மதுரை அண்ணாநகரை சேர்ந்த தொழிலதிபரான PKM செல்லையா, திருமதி.ருக்மணி பழனிவேல்ராஜன், அரசரடி பகுதியை சேர்ந்த திருமதி.மீனா அன்புநிதி, கே.கே.நகர் பகுதியை சேர்ந்த மருத்துவரும், எழுத்தாளருமான டாக்டர்.சீனிவாசன், மதுரை காந்திநகர் பகுதியை சேர்ந்த முன்னாள் கவுன்சிலர் சுப்புலட்சுமி, ஆகிய 5 பேர் இடம்பெற்றனர்.
இந்த அறங்காவலர் குழு உறுப்பினர்கள் விரைவில் அறங்காவலர்கள் குழு தலைவரை தேர்வு செய்வார்கள். இவர்களின் 2 ஆண்டுகள் எனவும் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த குழுவில் ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் வகுப்பை சேர்ந்த ஒரு உறுப்பினர், மகளிர் ஒரு உறுப்பினர் தேர்வு செய்ய வேண்டும் என்ற விதியின் அடிப்படையில் 5 அறங்காவலர்கள் உறுப்பினர்களை தேர்வு செய்து அறிவிப்பு வெளியிடப்பட்ட நிலையில் கடந்த டிசம்பர் 1 ஆம் தேதி 5 உறுப்பினர்களும் கோவில் அலுவலகத்தில் 5 பேரும் உறுதிமொழி ஏற்று பின்னர் கையெழுத்திட்டு பதவியேற்றனர். புதிதாக பதவியேற்ற உறுப்பினர்கள் ஒரு மாத காலத்திற்குள் அறங்காவலர் குழு தலைவருக்கான தேர்தல் நடத்தப்பட்டு அறங்காவல் குழு தலைவர் தேர்வு செய்யப்படும் என கோவில் நிர்வாகம் தரப்பில் அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் குழுத்தலைவருக்கான தேர்வு தொடர்பாக எவ்வித நடவடிக்கைகளும் தொடங்காத நிலையில் குழுத்தலைவர் தேர்வுக்கான கால அவகாசம் முடிவடைந்த நிலையில் அறங்காவலர்குழு தலைவராக 5பேரில் யாரேனும் ஒருவரை இந்து அறநிலையத்துறை சட்டப்படி அரசே தேர்வு செய்வதற்காக இந்து அறநிலையத்துறை இணை ஆணையர் அரசுக்கு பரிந்துரை கடிதம் அனுப்பிய நிலையில் மீனாட்சியம்மன் கோவில் அறங்காவலர்குழு தலைவராக தகவல்தொழில்நுட்பத்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜனின் தாயாரான ருக்மணி பழனிவேல்ராஜனை தேர்வு செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
மேலும் செய்திகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் - TN Fishermen: மீண்டும் அட்டூழியம்..! தமிழக மீனவர்கள் 6 பேரை சிறைபிடித்த இலங்கை கடற்படை
இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - PMK Meeting: சூடுபிடிக்கும் நாடாளுமன்ற தேர்தல் - பிப்ரவரி 1ல் பாமக பொதுக்குழு கூட்டம், கூட்டணி முடிவு வெளியாகுமா?