தமிழக அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.

  


 


சிதம்பரம் நடராஜர் கோவிலில் கனக சபை மீது ஏறி வழிபாடு நடத்த அனுமதி மறுக்கப்பட்டுள்ளது தொடர்பான கேள்வி


ஏற்கனவே உயர் நீதிமன்றத்தில் கனக சபையின் மீது பக்தர்கள் தரிசனம் செய்வதற்கு அனுமதிக்கப்படலாம். அது குறித்து இந்து சமய அறநிலையத்துறை முடிவு எடுத்துக் கொள்ளலாம் என்கிற தீர்ப்பின் அடிப்படையில், இந்து சமய அறநிலையத்துறையும் ஏற்கனவே பக்தர்கள் தரிசனம் செய்வதற்கு ஒரு ஆணை பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. அப்படி இருக்கின்ற போது இந்து சமய அறநிலையத்துறையை கலந்து ஆலோசிக்காமல் சுயமாக இப்படிப்பட்ட அறிவிப்புகளை வெளியிடுவது ஏற்றுக் கொள்ளக் கூடியது அல்ல. எதையெல்லாம் செய்யக்கூடாதோ அதை எல்லாம் செய்வதுதான் அங்கிருக்க பணியாக இருக்கிறது. இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரி பலகையை எடுக்கச் சொன்னதற்கு அவரிடம் தகராறு செய்து உள்ளார்கள். சட்ட வல்லுனர்களுடன் கலந்து ஆலோசித்து  உரிய நடவடிக்கையை மேற்கொள்ளப்படும்.




அர்ச்சகர்கள் லஞ்சம் கேட்பது குறித்த கேள்விக்கு:


புகார்கள் வரப்பெற்றால் யார் அந்த தவறில் ஈடுபட்டாலும் அவர்கள் மீது நிச்சயமாக துறை நடவடிக்கை எடுக்கும்.


பழனி கோவிலில் இந்துக்களுக்கு மட்டும் அனுமதி என்று வைக்கப்பட்ட பலகை நீக்கப்பட்டது குறித்த கேள்விக்கு:


இந்துக்கள் மட்டும் தான் அனுமதிக்கப்படுவார்கள் என்பதல்ல. இந்துக் கோவில்கள் வழிபாட்டு முறையை ஏற்றுக் கொண்டு வழிபடுவதற்கு, அவர்கள் சம்மதம் தெரிவித்தால். எந்த மதத்தினராக இருந்தாலும் திருக்கோவிலில் வழிபாடு மேற்கொள்ளலாம். ஆகவே இந்து கோயில் என்பது இந்துக்களின் அடையாளம் அவர்கள் ஏற்றுக் கொண்டு வரும் பட்சத்தில் அதற்கு தடை ஏதுமில்லை. எனவே ஒரு சில மதத்தை சார்ந்து அடையாளத்தோடு வரும்போதுதான், இது போன்ற பிரச்சனைகள் எழுகின்றது. அங்கே வைக்கப்பட்டிருந்த பலகை பற்றி எனக்கு அவ்வளவாக தெரியாது. அனைவரும் சகோதரத்துவத்தோடு வாழ்வதால், இது பிரித்து பார்க்க வேண்டியதில்லை. திராவிட மாடலை பொறுத்த அளவில் எம்மதமும் சம்மதம், அனைவரும் ஒன்றிணைந்து அண்ணன், தம்பி போல் வாழ வேண்டும் என்பதுதான் எங்களுடைய நிலைப்பாடு.




கோவில் நிலங்கள் ஆக்கிரமிப்பு குறித்த கேள்விக்கு:


இந்த ஆட்சி ஏற்பட்ட பிறகு 4000 ஏக்கருக்கு மேலாக இந்த சமய அறநிலையத்துறை வரலாற்றில் இல்லாத அளவிற்கு முதல்வர் வழிகாட்டுதல்படி நிலங்களை மீட்டெடுத்து இருக்கிறோம். அப்படிப் புகார் வரப் பெற்றிருந்தால், வேறு எதுவும் நிலங்கள் அடையாள காட்டப்பட்டால் அதை மீட்டெடுப்பதற்கு இந்து சமய அறநிலையத்துறை தயாராக இருக்கிறது. திருக்கோவில் நிலத்தை யார் ஆக்கிரமிப்பு செய்து வைத்திருந்தாலும், இறைவன் சொத்து இறைவனுக்கே என்ற வார்த்தையின் தாரக மந்திரத்தின் அடிப்படையில் நிச்சயமாக அதை மீட்பதற்கு உண்டான நடவடிக்கையை துறை மேற்கொள்ளும்.


கோவில் நிலங்களை விற்பது குறித்த கேள்விக்கு:


574 நீதிமன்ற தீர்ப்பின்படி இந்து சமய அறநிலையத்துறை நிலங்கள் அரசின் பயன்பாட்டிற்கு தேவை என்றால் வேறு இடங்கள் இல்லாத பட்சத்தில் அதை விற்கலாம் என்று தீர்ப்பு உள்ளது. இந்த வழக்கு ஏற்கனவே நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதால். இது குறித்து விளக்கம் அளிப்பது ஏற்புடையதாக இருக்காது என்றார்.


 


ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/abpnaduofficial என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.