எடப்பாடி பழனிசாமி செயல்பாடுகள் மீது கடும் அதிருப்தியில் இருந்த செங்கோட்டையன் இன்று கோபிசெட்டிபாளையத்தில் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அவர் என்ன சொல்ல போகிறார்? கட்சியை விட்டு விலகப் போகிறாரா? என்று பல்வேறு கேள்விகள் எழுந்த நிலையில், அதற்கான பதில்களை செய்தியாளர்கள் மத்தியில் செங்கோட்டையன் பகிர்ந்துக்கொண்டிருக்கிறார்.

Continues below advertisement

கட்சியில் இருந்து பிரிந்து சென்றவர்களை மீண்டும் சேர்க்க வேண்டும் என்று வலியுறுத்தி சில மாதங்களுக்கு முன்னர் செங்கோட்டையன் தலைமையில் நத்தம் விஸ்வநாதன், வேலுமணி, தங்கமணி, கே.பி.அன்பழகன், சிவி. சண்முகம் ஆகிய 6 பேர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து வலியுறுத்தியதாகவும் ஆனால், எடப்பாடி பழனிசாமி அதை ஏற்றுக்கொள்ளும் பக்குவத்திலும் மனநிலையிலும் இல்லையென்றும் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். இந்த செய்தி கடந்த சில மாதங்களுக்கு முன்னர் வெளியே  வந்த நிலையில், அப்படி யாரும் என்னை சந்திக்கவில்லை, எதுவும் வலியுறுத்தவில்லையென்று எடப்பாடி பழனிசாமி மறுத்த நிலையில், அது உண்மைதான் என்பதை செங்கோட்டையன் இன்று தன்னுடைய பத்திரிகையாளர் சந்திப்பில் போட்டு உடைத்துள்ளார்.

Continues below advertisement

இந்த நிலையில் இன்று காலை தேனி மாவட்டம் போடியில் தனது வீட்டில் இருந்த அதிமுகவுடைய முன்னாள் ஒருங்கிணைப்பளர் ஓபிஎஸ்சிடம் செங்கோட்டையன் குறித்து பத்திரிக்கையாளர்கள் கேள்வி எழுப்பியபோது, அதிமுகவை தோற்றுவித்த எம் ஜி ஆர் காலத்தில் இருந்து கழகத்தின் மாவட்ட செயலாளர் உள்ளிட்ட பல்வேறு பதவிகளில் வைத்து வந்துள்ளார். செங்கோட்டையன் செய்தியாளர் சந்திப்பிற்குப் பிறகு அவருடைய கருத்துக்களை அறிந்து பத்திரிக்கையாளரை சந்திப்பதாக ஓபிஎஸ் தெரிவித்தார்.

இந்த சூழலில் எடப்பாடி பழனிசாமி செயல்பாடுகள் மீது கடும் அதிருப்தியில் இருந்த செங்கோட்டையன் இன்று கோபிசெட்டிபாளையத்தில் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில் எடப்பாடி பழனிச்சாமி குறித்தும் கட்சியின் தன்மை, நிலைபாடு குறித்து பல்வேறு கருத்துக்களை முன்வைத்தார். இந்த செய்தியாளர் சந்திப்பு  நடந்த பின்பு தேனி மாவட்டம் போடியில் பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள வ உ சி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய ஓ பன்னீர்செல்வம் செய்தியாளர் சந்திப்பில் பேசினார். அப்போது  அதிமுக இயக்கத்தை எம்ஜிஆர் தொடங்கிய காலத்தில் இருந்து இந்த இயக்கத்திற்காக பாடுபட்டவர் செங்கோட்டையன்.

பல்வேறு பிரச்சினைகள் இந்த இயக்கத்திற்கு வந்த போது ஒரே நிலையில் இருந்து பாடுபட்டவர் செங்கோட்டையன். அதிமுகவில் பிரிந்து சென்ற தலைவர்கள் அனைவரையும் ஒருங்கிணைக்க வேண்டும் அப்போதுதான் மீண்டும் அதிமுக ஆட்சி அமைக்க முடியும். என்ற, அவரின் மனதின் குரலை வெளிப்படுத்தி இருக்கிறார். செங்கோட்டையனின் எண்ணம் நிறைவேறுவதற்கு எங்களுடைய வாழ்த்துக்களை, தெரிவிக்கிறோம், நாங்களும் அதற்காக தான் போராடி கொண்டிருக்கிறோம். எந்த தேர்தலையும் வெற்றி பெற முடியாத நிலை இருக்கிறது அது மாற வேண்டும் என்றால் தலைவர்கள் அனைவரும் ஒன்றிணைய வேண்டும் அதிமுக தொண்டர்களின் இயக்கம், இதில் தொண்டர்கள் யாரையும் வெளியேற்ற முடியாது என தெரிவித்தார்.