பிரட்டுக்கு 0% GST வரி, பேக்கரி பொருட்களுக்கு ஒரே மாதிரியான 5% GST வரி அறிவிப்பு - பேக்கரி தொழில்முனைவோர்களுக்கும், பொதுமக்களுக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. -  பிரதமர் மற்றும் நிதியமைச்சருக்கு நன்றி - ஆல் இந்திய பேக்கர்ஸ் பெடரேஷன் தலைவர் அன்புராஜன் பேட்டி.
 
அகில இந்திய பேக்கரி கூட்டமைப்பின் தலைவர் செய்தியாளர் சந்திப்பு
 
பேக்கரி பொருட்களான பிரட்டுக்கு 0% ஜிஎஸ்டி வரியும்,  மற்ற பேக்கிரி பொருட்களுக்கு  ஏற்கனவே இருந்த மூன்று அடுக்கு GST வரியான 5% 12%, 18% என்பதற்கு பதிலாக தற்போது ஒரே மாதிரியாக 5% GSTயாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த இந்த அறிவிப்பு பேக்கரி தொழில் முனைவர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையல் பேக்கரி பொருட்களுக்கான GST அறிவிப்பு தொடர்பாக மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த அகில இந்திய பேக்கரி கூட்டமைப்பின் தலைவரான அன்புராஜன் பேசியபோது...,” 2017 ஆம் ஆண்டு முதல் பேக்கரி பொருட்களுக்கான ஜிஎஸ்டி 5% 12%, 18% என மூன்று அடுக்குகளாக இருந்த நிலையில் அது வாடிக்கையாளர்களுக்கும் தொழில் முனைவோர்களுக்கும் அதிகாரிகளுக்கும் இடையே மிகப் பெரிய குளறுபடி ஏற்பட்டுவந்தது.
 
மிகப்பெரிய மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
 
இது தொடர்பாக நேற்று முன்தினம் நடைபெற்ற கூட்டத்தில் மத்திய அரசிடம் வலியுறுத்தினோம், இதையடுத்து மத்திய நிதிமைச்சர் அறிவித்துள்ள ஜிஎஸ்டி வரி குறைப்பு அறிவிப்பு என்பது பேக்கரி பொருட்களான பிரட்டிற்கு 0% GST வரி எனவும் மற்ற பேக்கரி பொருட்களுக்கு ஒரே மாதிரி வரியாக 5% ஜிஎஸ்டி வரி மட்டுமே விதிக்கப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பு பேக்கரி பொருட்களை தயாரிக்கும் தொழில் முனைவோர்களிடையே மிகப்பெரிய மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் பொதுமக்களிடமும் வாங்கும் திறனும் அதிகரிக்கும்.
 
பட்டர் பன்னுக்கும், 5% ஜிஎஸ்டி வரிக்குள் வரும்
 
இது தொழில் முனைவோருக்கும் நாட்டுக்கும் நன்மை பயக்கும் வகையில் அமையும் எனவும் உள்நாட்டுப் பொருட்களின் விற்பனையை ஊக்குவிக்கும் வகையில் இது போன்ற வரி குறைப்பு செய்யப்பட்டுள்ளது. துணிச்சலான முடிவு எனவும், இந்த வரிக்குறைப்பால் தொழில் முனைவர்களைப் போல, அரசுக்கு பயனாக இருக்கும், பொதுமக்கள் குறைந்த விலையில் பேக்கரி பொருட்களை வாங்குவார்கள் எனவும் தெரிவித்தார். மேலும் பட்டர் பன்னுக்கும், 5% ஜிஎஸ்டி வரிக்குள் வரும் எனவும் எதிர்பார்க்கிறோம் எனவும் தெரிவித்தார்.