தேனி நாடாளுமன்ற உறுப்பினர் ஓ.பி.ரவீந்திரநாத் விவகாரத்தில் நிச்சயமாக உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்படும் - முன்னாள் முதல்வர் ஓ.பி.எஸ் பேட்டி.

 

மதுரையில் இருந்து சென்னை செல்வதற்காக முன்னாள் முதல்வர் ஓ.பி.எஸ்., மதுரை விமான நிலையம் வந்தடைந்தார். அப்போது செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது.

 

தேர்தல் ஆணையம் உங்களை இன்னும் ஒருங்கிணைப்பாளராக வைத்துள்ளது குறித்த கேள்விக்கு

உங்களுக்கு புரிந்திருக்கிறது புரிய வேண்டியவர்களுக்கு புரியவில்லை.

 


மணிப்பூர் கலவரம் குறித்த கேள்விக்கு

நிரந்தர அமைதி ஏற்படுத்துவதற்கு மத்திய மாநில அரசுகள் முயற்சிகள் ஏற்படுத்த வேண்டும். இரண்டு மாதங்களுக்கு முன்பாக இரண்டு பேர் கொடூரமான முறையில் நடத்தப்பட்டுள்ளது நடைபெறாமல் தடுப்பது அந்த மாநிலத்தின் கடமை, இந்திய அரசின் கடமை.



 

பா.ஜ.கவுடனான கூட்டணி தொடர்கிறதா என்ற கேள்விக்கு


அவர்களாக முறித்துக் கொள்ளும் வரை நாங்கள் அந்த கூட்டணியில் தொடர்கிறோம்.

 

தி.மு.க அமைச்சர்கள் மீதான வழக்கு குறித்த கேள்விக்கு

 

அமைச்சர்கள் மீது வழக்கு தொடர்ந்தால் அதை எதிர் கொண்டு வெற்றி அடைய வேண்டியது அவர்களின் பொறுப்பு.

 

ஸ்டாலினை முதல்வராக்குவோம் என்று திண்டுக்கல் சீனிவாசன் உளறியது குறித்த கேள்விக்கு


 

இது குறித்து அவரிடம் தான் கேட்வேண்டும். திண்டுக்கல் சீனிவாசன் எங்கிருந்தாலும் வாழ்க.


 

ஓ.பி.ஆர் வழக்கு குறித்த கேள்விக்கு

 

நிச்சயமாக உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்படும்.

 





ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/abpnaduofficial என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.

 


 


 








ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண