பழனி கோவிலுக்கு உட்பட்ட முடி காணிக்கை செலுத்தும் இடங்களில் புதிய வகை சீட்டு வழங்கபடுவதில் பெண்கள் மொட்டை அடித்தால் தரிசனத்திற்கு அனுமதி வழங்கபடும் நிலையில் கோவில் சூப்பிரண்டு உதவியுடன் பல லட்சம் ஊழல் நடப்பதாக கூறி இந்து முன்னணியினர் தெரிவித்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.




அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்களும் திருவிழா மற்றும் விசேஷ காலங்களில் லட்சக்கணக்கான பக்தர்களும் வருகின்றனர். இவ்வாறு வருகை தரும் பக்தர்கள் தங்களது நேர்த்திக்கடனாக முடி காணிக்கைகளை செலுத்திவிட்டு பழனி முருகனை தரிசனம் செய்வது வழக்கமாக இருந்து வருகிறது . இந்நிலையில் பழனி கோவிலுக்கு உட்பட்ட சரவண பொய்கை, சண்முக நதி ,ஒருங்கிணைந்த முடி மண்டபம், மின் இழுவை ரயில் முடி மண்டபம் , தண்டபாணி நிலைய முடி இறக்கும் இடங்கள் உள்ளிட்ட 5 இடங்கள் உள்ளது. இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு முடி காணிக்கை செலுத்த கட்டணம் இல்லை என்று தமிழக அரசு அறிவித்திருந்தது அப்போது முதல் முடி காணிக்கை சீட்டுக்கு கட்டணம் செலுத்தாமல் பக்தர்கள் முடிகாணிக்கைகளை செலுத்தி வருகின்றனர்.




தற்போது முடி காணிக்கை சீட்டு வழங்கும் பணியை மெருகூட்டுவதற்காக புதிய நடைமுறையை கோவில் நிர்வாகம் கொண்டு வந்துள்ளது. பக்தர்களின் போட்டோவுடன் இணைத்து ஆன்லைன் மூலமாக முடி காணிக்கை சீட்டு வழங்கபட்டு பின்னர் முடி காணிக்கை செலுத்தப்பட்டு மீண்டும் இந்த சீட்டை கோவில் நிர்வாக டிக்கெட் வழங்கும் இடத்தில் கொடுத்து முடி எடுத்தவரின் போட்டோவுடன் சீட்டு வழங்கப்படுகிறது, இந்த நடைமுறைக்கு நீண்ட நேரம் தாமதமாவதால் தங்களுக்கு வேலை செய்ய நேரம் போதவில்லை என்றும் பழைய முறை சீட்டு வழங்க வேண்டும் என ஏற்கனவே மொட்டை அடிக்கும் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில் புதிய வகை சீட்டு மூலம் பல்வேறு முறைகேடுகள் நடப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இன்று ஹிந்து முன்னணி கோட்ட பொறுப்பாளரான பாலன் என்பவர் முடி காணிக்கை செலுத்துவதற்காக சரவணப் பொய்கை முடி காணிக்கை செலுத்தும் இடத்திற்கு வந்து முடி காணிக்கை சீட்டு வாங்கி முடி காணிக்கை எடுத்துள்ளார், பின்னர் முடி காணிக்கை செலுத்தி விட்டு மீண்டும் அந்த சீட்டில் முடி காணிக்கை எடுத்தவரின் புகைப்படத்துடன் சீட்டு வழங்கப்பட்டுள்ளது,




அதில் முடி எடுத்தவர் படத்திற்கு பதிலாக வேறொருவரின் படம் இருந்ததால் குழப்பமடைந்தார். இதுகுறித்து கோவில் சூப்பிரண்டு கேட்டபோது இங்கு இப்படி தான் என்றும் பேசியதாக தெரிகிறது. மேலும்  பெண்களுக்கு முடி காணிக்கை எடுத்தால் பழனி கோவிலில் தரிசனம் மூன்று பேர் இலவசமாக செய்து கொள்ளலாம், ஆனால் சூப்பிரண்டுகள் உதவியுடன் கோவிலுக்கு சொந்தமான இடத்தில்  டிக்கெட் மட்டும்  எடுத்துக்கொண்டு தனியார் முடி எடுக்கும் இடங்களில் பெண்கள் மொட்டைக்கு இலவசம் என்று போலி கைடுகள் அழைப்பதை நம்பி செல்லும் பெண் பக்தர்கள் மொட்டை அடிப்பதால் பெண்கள் முடி ஆயிரக்கணக்கில் விற்பனையாகும் என்றும் இதில் கோவில் அதிகாரிகளுக்கு பங்கு செல்கிறது என்றும் இதன் மூலம் பல லட்சம் ரூபாய் முறைகேடு நடப்பதாக கூறியுள்ள சம்பவம் பழனியில் பரபரப்பு ஏற்பட்டது. ஏற்கனவே மொட்டை அடிக்கும் ஊழியர்கள் பழைய முறை சீட்டுகள் வழங்க வேண்டும் என கோரிக்கை இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.




ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/abpnaduofficial என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.











ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண